• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மதுரையில் குறையும் கொரோனா பாதிப்பு; அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காலியாகும் படுக்கைகள்

மதுரையில் குறையும் கொரோனா பாதிப்பு; அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காலியாகும் படுக்கைகள்

மதுரையில் குறையும் கொரோனா பாதிப்பு

மதுரையில் குறையும் கொரோனா பாதிப்பு

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தலா  1100 சாதாரண மற்றும் ஆக்சிஜன் படுக்கைகளும் காலியாக உள்ளது. அதேபோல் 34 கோவிட் கேர் மையங்களிலும் 1839 படுக்கைகள் காலியாக உள்ளது. 

  • Share this:
மதுரையில் கடந்த 3 நாட்களாக தினசரி கொரோனா தொற்று ஆயிரத்திற்கு கீழ் பதிவாகி வருவதால் படுக்கைகளும் சற்று காலியாகி வருகிறது.

மதுரை மாவட்டத்தில் கொரோனோ 2ம் அலையில் இதுவரை 43,542  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதமாக தினசரி  கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 1200 முதல் 1500 வரை இருந்து வந்தது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை இல்லாமல் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது ஆயிரத்திற்கும் கீழாக குறைய துவங்கியுள்ளது. கடந்த 28ம் தேதி வரை 1300க்கும் அதிகமாக இருந்து வந்த பாதிப்பு எண்ணிக்கை 29ம் தேதி 828 ஆகவும், 30ம் தேதி 792 ஆகவும், 31ம் தேதி 695 ஆகவும் குறைந்து வருகிறது.

குணமடைந்து திரும்புவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது, நேற்று ஒரே நாளில் 899 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நிரம்பி வழிந்த நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து படுக்கைகள் காலியாகி வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தலா  1100 சாதாரண மற்றும் ஆக்சிஜன் படுக்கைகளும் காலியாக உள்ளது. அதேபோல் 34 கோவிட் கேர் மையங்களிலும் 1839 படுக்கைகள் காலியாக உள்ளது.

மதுரை மாவட்டத்தில் துவக்கம் முதல் மாநகர் பகுதியில் கொரோனா பரவல் அதிகளவில் இருந்ததால் அங்கு நாள்தோறும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் அமைத்து கொரோனா அறிகுறியை கண்டறிந்து காலம் தாழ்த்தாமல்  உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்வது, ஒரு தெருவில் 3 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டால் அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு கண்காணிப்பது போன்ற கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் காரணமாகவும் தற்போது அமலில் உள்ள முழு ஊரடங்கு மூலமும் கொரோனோ பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மாநகர் பகுதியை போலவே ஊரக பகுதிகளிலும் கொரோனா பரவல் சற்று அதிகரித்து வருவதால் அங்கும் இதே போன்ற காய்ச்சல் கண்டறியும் முகாம் உள்ளிட்ட கொரோனோ பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் துவக்கத்தில் அதிகரித்த கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. கிராமப்புறங்களில் கொரோனா பரவலை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதால் நோய் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: