ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

"முதல்வர் நாற்காலியில் நடிகர் அஜித்" மதுரை ரசிகர்களின் சர்ச்சை போஸ்டர்

"முதல்வர் நாற்காலியில் நடிகர் அஜித்" மதுரை ரசிகர்களின் சர்ச்சை போஸ்டர்

மதுரை ரசிகர்களின் சர்ச்சை போஸ்டர்

மதுரை ரசிகர்களின் சர்ச்சை போஸ்டர்

மதுரையில் விஜய் ரசிகர்களுக்கு போட்டியாக அஜித் ரசிகர்களும் அவரை அரசியலுக்கு இழுக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மதுரையில் விஜய் ரசிகர்களுக்கு போட்டியாக அஜித் ரசிகர்களும் அவரை அரசியலுக்கு இழுக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளனர்.

மதுரையை சேர்ந்த விஜய் ரசிகர்கள் அவரை, கட்சி அரசியலுக்கு இழுக்கும் நோக்கில் அவ்வப்போது வித விதமான வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டி கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கையில் ஈடுபவது வழக்கம்.

இந்நிலையில், மதுரையை சேர்ந்த "தூங்காநகரம் அஜித் ஃபேன்ஸ்" என்ற பெயரில் அஜித் ரசிகர்கள் சிலர் அவரை அரசியலுக்கு இழுக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

அதில், "எங்களின் வலிமை-யை பட்டி தொட்டியும் தெரியும், சட்டசபையும் அறியும்!" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.மேலும், சட்டசபை முகப்பு கட்டிடத்தின் பின்னணியில் முதலமைச்சர் நாற்காலியில் நடிகர் அஜித்குமார் அமர்ந்திருப்பது போன்றும் போஸ்டரை வடிவமைத்து உள்ளனர்.

நடிகர் அஜித்குமார் அவரது ரசிகர் மன்றத்தை பல ஆண்டுகளுக்கு முன்னரே கலைத்திருந்த நிலையில், சமீபத்தில் அவருக்கு ரசிகர்கள் வழங்கிய "தல" எனும் பட்டத்தை கூட தவிர்க்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த சூழலில் தான் அவரை அரசியலுக்கும் இழுக்கும் வகையில் அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளனர்.

First published:

Tags: Actor Ajith