மதுரை தேர்தல் பார்வையாளருக்கு கொரோனா: சொந்த காரில் அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்த ஆட்சியர் அன்பழகன்!

மதுரை தேர்தல் பார்வையாளருக்கு கொரோனா: சொந்த காரில் அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்த ஆட்சியர் அன்பழகன்!

ஆட்சியர் அன்பழகன்

மதுரை மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கான காவல் துறை பார்வையாளராக உத்தர பிரதேசத்தை சேர்ந்த தரம் வீர் யாதவ் என்கிற ஐ.பி.எஸ் அதிகாரி கடந்த 10 நாட்களாக பணியாற்றி வருகிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மதுரையில் தேர்தல் பார்வையாளராக பணியாற்றி வந்த உத்தரப்ரதேச ஐ.பி.எஸ். அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், அவரை தன் சொந்த காரில் அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்த மாவட்ட ஆட்சியர் அன்பழகனின் செயலுக்கு மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகளுக்கு கண்காணிப்பு அதிகாரிகளாக வெளி மாநிலங்களை சேர்ந்த பல ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கான காவல் துறை பார்வையாளராக உத்தர பிரதேசத்தை சேர்ந்த தரம் வீர் யாதவ் என்கிற ஐ.பி.எஸ் அதிகாரி கடந்த 10 நாட்களாக பணியாற்றி வருகிறார்.

மதுரை மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள காவல்துறை விடுதியில் தங்கியிருந்த அவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உடனே தன்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு, அவருடைய வாகன ஒட்டுனரிடம் கேட்டுள்ளார்.
மாவட்ட தேர்தல் ஆணையம் சார்பில் நியமிக்கப்பட்டிருந்த அந்த ஓட்டுநர், கொரோனா அச்சம் காரணமாக தன்னால் மருத்துவமனைக்கு வர இயலாது என தவிர்த்து உள்ளார்.இந்த தகவலை கேள்விப்பட்ட மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன், உடனே கொரோனா பாதுகாப்பு கவச உடை அணிந்து கொண்டு தன்னுடைய சொந்த காரில் தரம் வீர் யாதவை தானே அழைத்து வந்து, அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் இன்று காலை சிகிச்சைக்கு அனுமதித்து உள்ளார். தகவலறிந்த, அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் சங்குமணி அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்தார்.

Also read... ரயில்வேக்கு ரூ.3 லட்சம் அபராதம் - கர்நாடக நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இதனை தொடர்ந்து, அவர் தங்கியிருந்த அறையில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு, உடன் பணியாற்றிய நபர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

மாவட்ட ஆட்சியரின் இந்த பொறுப்பான செயல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள அதே நேரம், கொரோனா அச்சம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: