• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கோவை, மதுரையில் மெட்ரோ ரயில்: பட்ஜெட்டில் தகவல்!

கோவை, மதுரையில் மெட்ரோ ரயில்: பட்ஜெட்டில் தகவல்!

மெட்ரோ ரயில்

மெட்ரோ ரயில்

சென்னையை போன்று தமிழகத்தின் பிற மாநகராட்சிகளிலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கோவையில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது.

  • Share this:
    கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பது தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசித்து விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கடந்த 2015ம் ஆண்டு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. அதன்படி தற்போது சென்னையில் 2 வழிப் பாதைகளில் மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது. தற்போது இரண்டாம் கட்டமாக சென்னையில் மேலும் மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.இதனிடையே, சென்னையை போன்று தமிழகத்தின் பிற மாநகராட்சிகளிலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    முதற்கட்டமாக கோவையில் மெட்ரோ ரயில் திட்டதை தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஆய்வு அறிக்கையும் தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பட்ஜெட் உரையில் குறிப்பிட்டு பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘ கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பது குறித்து மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கைகள் தயார் செய்யப்படும்’ என்று அறிவித்தார்.

    இதையும் படிங்க: கோடம்பாக்கம்- பூந்தமல்லி மெட்ரோ சேவை: பட்ஜெட்டில் முக்கிய தகவல்!


    கோவை மெட்ரோ 

    கோவையில் ஐந்து வழித்தடங்களில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைப்பதற்கான அறிக்கை, தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  கணியூர் -உக்கடம் 26 கி.மீ.,  பிளிச்சி- உக்கடம் 24 கி.மீ., காரணம் பேட்டை- தண்ணீர்பந்தல் 42 கி.மீ., கணேசபுரம் - காருண்யா நகர் 44 கி.மீ., உக்கடம் - வெள்ளலுார் பஸ் ஸ்டாண்ட் 8 கி.மீ., என 144 கிலோமீட்டர் நீளத்துக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அண்மையில்,  கோவை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்காக, வழித்தடம் முழுவதும் நிலவியல் ஆய்வு செய்வதற்கு டெண்டர் அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: