மதுரையில் வணிகரை மிரட்டி ரூ.10 லட்சம் பறித்த வழக்கு: காவல் ஆய்வாளர் வசந்திக்கு செப்.9 வரை நீதிமன்ற காவல்

மதுரையில் வணிகரை மிரட்டி ரூ.10 லட்சம் பறித்த வழக்கு: காவல் ஆய்வாளர் வசந்திக்கு செப்.9 வரை நீதிமன்ற காவல்

மதுரையில் வணிகரை மிரட்டி 10 லட்ச ரூபாய் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் வசந்திக்கு செப்டம்பர் 9 வரை நீதிமன்ற காவல் விதித்து மதுரை கூடுதல் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • Share this:
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த அர்சத் என்பவர் பேக் கம்பெனிக்கு தேவையான பொருட்களை வாங்க ஜூலை மாதம் 5 தேதி 10 லட்ச ரூபாய் பணத்துடன் மதுரை தேனி ரோடு, அருகில் வந்த போது பால்பாண்டி, பாண்டியராஜன், உக்கிரபாண்டி, சீமைச்சாமி மற்றும் நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி ஆகியோர் அர்சத் வைத்திருந்த 10 லட்ச ரூபாய் பணத்தை மிரட்டி பிடிங்கிக் கொண்டதாக கடந்த ஜூலை 27ம் தேதி கொடுத்த புகாரில் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு 10ம் தேதி இவ்வழக்கில் தொடர்புடைய தேனியை சேர்ந்த பால்பாண்டி என்பவர் கைது செய்து அவரிடமிருந்து 61 ஆயிரம் பணத்தை கைப்பற்றினர்.

Also read: நெடுஞ்சாலை துறையில் புதிய அறிவிப்புகள் என்னென்ன?

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய  உக்கிரபாண்டி, சீமைச்சாமி ஆகியோரை கைது செய்து உக்கிரபாண்டியிடமிருந்து ரூ.1,20,000 மற்றும் சீமைச்சாமியிடமிருந்து ரூ.45,000 பணத்தை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வழக்கில் இதுவரை மொத்தம் ரூ.2,26,000 பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், தலைமறைவாக இருந்த மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் வசந்தி இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தனிப்படையினர் நேற்று (ஆக.26) நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வைத்து வசந்தி மற்றும் அவரது உறவினர் பாண்டியராஜ் ஆகியோரை கைது செய்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வந்தனர்.

மருத்துவ பரிசோதனை முடிந்து கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லும்போது பத்திரிக்கையாளர்கள் புகைப்படம், ஒளிப்பதிவு செய்ய முயன்றபோது காவல் ஆய்வாளர் வசந்தியின் வழக்கறிஞர்கள் மற்றும் குண்டர்கள் போலீசார் மற்றும் பத்திரிக்கையாளர்களை தகாத வார்த்தையில் திட்டி மிரட்டி படம் எடுக்க விடாமல் தடுத்தனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர், மதுரை மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது, தனது உடலில் காயங்கள் இருப்பதாக கூறி மருத்துவ வசதி கேட்டார். நீதிபதி உத்தரவின் பேரில் வசந்தியின் முழு உடலை பரிசோதித்து பார்த்த பின்னர், அவருக்கு செப்டம்பர் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு நிலக்கோட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னதாக, முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வசந்தி தாக்கல் செய்திருந்த மனு மீது ஆக.23 அன்று விசாரணை நடத்திய நீதிபதி, "குற்றம் சுமத்தப்பட்ட காவல் ஆய்வாளரை ஏன் இதுவரை கைது செய்யவில்லை? இப்படி இருந்தால் காவல்துறை மீது எப்படி மக்களுக்கு நம்பிக்கை வரும்?" என கண்டிப்பு தெரிவித்து இருந்ததார். அதன் பின்னரே, காவல்துறை தேடுதல் வேட்டையை நடத்தி வசந்தியை நேற்று கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Esakki Raja
First published: