100 வார்டுகளை கொண்ட
மதுரை மாநகராட்சியில்
திமுக கூட்டணி 80 வார்டுகளிலும்,
அதிமுக 15 வார்டுகளிலும்,
பாஜக ஒரு வார்டிலும், சுயேச்சை 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில் கீரைத்துறை பகுதியில் உள்ள 86வது வார்டில் மட்டும் பா.ஜ.க வெற்றி பெற்றிருந்தாலும்,10 வார்டுகளில் அ.தி.மு.கவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. மேலும் 49 வார்டுகளில் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.
இதன்மூலம் தி.மு.க, அ.தி.மு.கவுக்கான மாற்று அரசியலை முன்வைத்த நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. அந்தவகையில் நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய இரண்டு கட்சிகளும் ஒரு வார்டில் கூட இரண்டாம் இடங்களை பெறவில்லை.
விருதுநகர் : 'வலிமை' படத்தை வரவேற்று திமுக போஸ்டர் - இணையத்தில் வைரல்
மாறாக, சுயேச்சை வேட்பாளர்கள் 10 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் மூன்று வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, எஸ்.டி.பி.ஐ, தேமுதிக, காங்கிரஸ் கட்சிகள் தலா 1 வார்டிலும் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளன. மூன்றாம் இடத்தில் சுயேச்சை வேட்பாளர்கள் 14 வார்டுகளையும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் ஆறு வார்டுகளையும், நாம் தமிழர் ஐந்து வார்டுகளையும் பிடித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.