Home /News /tamil-nadu /

மதுரை உயர்நீதிமன்றத்தின் முன் 3 மாதங்களுக்கு தவம் - அய்யாக்கண்ணு அறிவிப்பு

மதுரை உயர்நீதிமன்றத்தின் முன் 3 மாதங்களுக்கு தவம் - அய்யாக்கண்ணு அறிவிப்பு

விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கன்னு

விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கன்னு

Madurai Ayyakannu | மத்திய அரசு நடவடிக்கைகள் எடுக்காததால் நீதிபதிகள் கருணைக்காக மதுரை உயர்நீதிமன்ற கிளை முன் எப்ரல் 11 முதல் 3 மாதங்களுக்கு அமைதி வழியில் தவம் இருக்க உள்ளோம் என்று அய்யாகண்ணா தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
விவசாயிகளின் நீண்ட நாட்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மதுரை உயர்நீதிமன்றத்தின் முன் 3 மாதங்களுக்கு தவம் இருக்க போவதாக விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கன்னு அறிவித்துள்ளனர்.

தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கன்னு மதுரை மாநகர காவல் ஆணையரை சந்தித்து அனுமதிக்கோரி மனு அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அய்யாக்கன்னு கூறுகையில் "எம்.எஸ்.சாமிநாதன் அறிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், வங்கிகளில் விவசாய கடன்களுக்கு அதிக வட்டி வசூல் செய்வதை தடுக்க வேண்டும், விவசாய கடன்களுக்கு அபரீதமாக வட்டி கணக்கீட்டு விவசாய நிலங்களை ஏலம் விடுவதை தடுக்க வேண்டும், இந்தியா முழுதும் விவசாயிகளுக்கு உள்ள 1 இலட்சம் கோடி கடன்களுக்காக அவர்களுடைய நிலங்கள் ஏலம் விடக் கூடாது என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தோம் என்றும் தெரிவித்தார்.

Also read... இளநீர் வியாபாரியின் செல்போனை ஒரு மணி நேரமாக வைத்து கொண்டு ஆட்டம் போட்ட 'சேட்டை குரங்கு'

ஆனால் மத்திய அரசு நடவடிக்கைகள் எடுக்காததால் நீதிபதிகள் கருணைக்காக மதுரை உயர்நீதிமன்ற கிளை முன் எப்ரல் 11 முதல் 3 மாதங்களுக்கு அமைதி வழியில் தவம் இருக்க உள்ளோம், தற்போதைக்கு 5 நாட்கள் அறவழி தவத்திற்கு அனுமதி கேட்டுள்ளோம்.  இந்த அறவழி தவத்தில் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர்" என கூறினார்.

-செய்தியாளர்: ஹரிகிருஷ்ணன்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Madurai High Court

அடுத்த செய்தி