Home /News /tamil-nadu /

வடிவேல் பாணி கமெண்ட்ரி, டான்ஸ் ஆடி காளையர்களை உற்சாகப்படுத்திய மூதாட்டி - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சுவாரஸ்யங்கள்

வடிவேல் பாணி கமெண்ட்ரி, டான்ஸ் ஆடி காளையர்களை உற்சாகப்படுத்திய மூதாட்டி - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சுவாரஸ்யங்கள்

avaniyapuram Jallikattu

avaniyapuram Jallikattu

Avaniyapuram Jallikkattu: அவனியாபுரம் ஜல்லிகட்டில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து மூதாட்டி ஒருவர், காளைகளை தழுவிய காளையர்களை, டான்ஸ் ஆடி உற்சாகப்படுத்தினார். மூதாட்டியும் உற்சாகமாக இருந்தார்.

    வடிவேல் பாணி கமெண்ட்ரி, டான்ஸ் ஆடி காளையர்களை உற்சாகப்படுத்திய மூதாட்டி, முதல் முறையாக கார் பரிசு என அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சுவாரஸ்யமாக நடந்து வருகிறது.

    பொங்கல் திருவிழாவையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உலகப் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி கொரோனா பரவல் காரணமாக பல கட்டுப்பாடுகளுடன் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியைக் காண மொத்தமே 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆன் லைன் மூலமாக பதிவு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட 300 மாடுபிடி வீரர்களும், 600 காளைகளும் பங்கேற்பு.

    விறுவிறுப்பாக நடைபெற்று வரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பார்வையாளர்கள் இல்லாத குறையை போக்கும் வகையில் பல சுவாரஸ்யங்கள் நடந்துள்ளது.

    Jallikattu


    வடிவேல் பாணியில் கமெண்ட்ரி:

    ஜல்லிக்கட்டு விழாபார்வையாளர்கள் இருந்தால் உற்சாகம் கரை புரண்டு ஓடும்.  இழந்த அந்த உற்சாகத்தை ஜல்லிக்கட்டு வர்ணனையாளர்கள் போக்கினர். நகைச்சுவை நடிகர் வடிவேல் பட காமெடி வசனங்களை அவ்வப்போது பேசி, ஜல்லிக்கட்டு விழாவை கலகலப்பாக்கி வருகின்றனர் ..

    டான்ஸ் ஆடி காளையர்களை உற்சாகப்படுத்திய மூதாட்டி

    அவனியாபுரம் ஜல்லிகட்டில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து மூதாட்டி ஒருவர், காளைகளை தழுவிய காளையர்களை, டான்ஸ் ஆடி உற்சாகப்படுத்தினார். மூதாட்டியும் உற்சாகமாக இருந்தார்.

    முதல் முறையாக கார் பரிசு:

    அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் சிறப்பான காளைகள், காளையர்களுக்கு கார் பரிசளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல் முறையாக இந்த ஜல்லிக்கட்டில் கார் பரிசு வழங்கப்படுகிறது.

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் வழங்கப்பட இருக்கிறது. இதே போல சிறந்த காளைக்கான பரிசாக, சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் சார்பாக இருசக்கர வாகனம் வழங்கப்பட இருக்கிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கார் பரிசாக வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

    கார் பரிசு தட்டி செல்ல உள்ள வீரர் யார்? கடும் போட்டி

    அவனியாபுரம் ஜல்லிகட்டில் அதிக காளைகளை தழுவி யார் முதல் பரிசை தட்டி செல்ல உள்ளனர் என கடும் போட்டி நிலவுகிறது. வலையங்குளம் வீரர் முருகன் 17 காளைகளை பிடித்து மதியம் 1 மணி நிலவரப்படி, முதல் இடத்தில் உள்ளா ர். அவனியாபுரம் வீரர் கார்த்திக் 13 காளைகளை தழுவி 2 ம் இடத்தில் உள்ளார்.
    இவர்களில் யார் அதிக காளைகளை தழுவி முதல் இடத்தை தட்டி செல்ல உள்ளனர் என கடும் போட்டி நிலவுகிறது.

     

     
    Published by:Arun
    First published:

    Tags: Jallikattu, Madurai

    அடுத்த செய்தி