மதுரை ஆவினில் 13.78 கோடி ரூபாய் முறைகேடு- 5 பேர் பணி இடைநீக்கம்!

ஆவின்

உதவி பொதுமேலாளர்கள் கிருஷ்ணன், சேகர், மேலாளர் மணிகண்டன் உள்பட 5 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மதுரை ஆவின் நிறுவனத்தில் பால் உபபொருள்கள் விற்பனையில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது தொடர்பாக , உதவி பொதுமேலாளர் உள்பட 5 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

மதுரை ஆவின் நிறுவனத்தில் தினமும் கொள்முதல் செய்யப்படும் பாக்கெட்டுகளாக அடைத்து விற்பனை செய்யப்படுவது போக , தயிர் , வெண்ணெய் , நெய் உள்ளிட்ட பல்வேறு உபபொருள்கள் தயாரிக்கப்படுகின்றன . ஆவின் நிறுவனத்தின் உபபொருள்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு என்பதால் , இதன் உற்பத்தி அதிகப்படுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே , மதுரை ஆவின் நிறுவனத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன . இதில் , பால் உபபொருள்கள் விற்பனையில் ரூ .13.71 கோடி முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார் எழுந்தது.

இது குறித்து ஆவின் நிர்வாக இயக்குநர் கே . நந்தகோபாலுக்கு புகார்கள் அனுப்பப்பட்டன . முதல் கட்ட விசாரணையில் , அதற்கான முகாந்திரம் இருப்பதாகத் தெரியவந்ததையடுத்து , சென்னை ஆவின் துணைப் பதிவாளர் அலெக்ஸ் தலைமையிலான அலுவலர்கள் குழுவினர் கடந்த 10 நாள்களாக தணிக்கையில் ஈடுபட்டனர்.

Also read... சட்டசபையில் 68 ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வரும் ஆங்கிலோ இந்தியன் பிரதிநிதித்துவம்...!

அதில் , உபபொருள்கள் விற்பனையில் ரூ .13.71 கோடி முறைகேடு நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டது . இது அதையடுத்து, உதவி பொதுமேலாளர்கள் கிருஷ்ணன், சேகர், மேலாளர் மணிகண்டன் உள்பட 5 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது . திருப்பதி தேவஸ்தானத்துக்கு லட்டு தயாரிப்புக்காக மதுரை ஆவின் நிறுவனத்திலிருந்து நெய் அனுப்பியது மற்றும் வெளிச்சந்தையில் நெய், வெண்ணெய் போன்ற பொருள்கள் விற்பனை செய்தது உள்ளிட்டவற்றில் இந்த முறைகேடு நடந்துள்ளதாக விசாரணை முடிந்த பின்னர் முழுமையான தகவல்கள் வெளிவரும் என்று கூறுகின்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: