ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மதுரையில் மற்றுமொரு காப்பகம் அனுமதி இல்லாமல் இயங்கி வருவது கண்டுபிடிப்பு

சுஜீதா லட்சுமி என்ற பெண்மணி "தாய் வீடு" என்ற பெயரில் அறக்கட்டளை நடத்துவதற்கு மட்டுமே அனுமதி பெற்று விட்டு கடந்த இரண்டரை ஆண்டுகளாக முதியோர் காப்பகம் நடத்தி வந்துள்ளார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மதுரையிலுள்ள காப்பகங்களில் வருவாய்த்துறையினர் நடத்திய ஆய்வில் விராட்டிபத்து பகுதியில் உள்ள "தாய் வீடு" என்ற முதியோர் காப்பகம் அனுமதி இல்லாமல் இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இயங்கிய இதயம் அறக்கட்டளை சட்ட விரோதமாக காப்பகம் நடத்தி, இரண்டு குழந்தைகளை விலைக்கு விற்ற வழக்கின் எதிரொலியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து காப்பகங்களிலும் ஆய்வு நடத்த ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன்படி, மதுரை கோட்டாட்சியர் முருகானந்தம் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் விராட்டிபத்து பகுதியில் நடத்திய ஆய்வில் "தாய் வீடு" என்ற முதியோர் காப்பகம் 12 முதியோர்களுடன் அனுமதி இல்லாமல் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுஜீதா லட்சுமி என்ற பெண்மணி "தாய் வீடு" என்ற பெயரில் அறக்கட்டளை நடத்துவதற்கு மட்டுமே அனுமதி பெற்று விட்டு கடந்த இரண்டரை ஆண்டுகளாக முதியோர் காப்பகம் நடத்தி வந்துள்ளார்.

Also read: lockdown | அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வு, கட்டுப்பாடு: மருத்துவ குழு பரிந்துரை

மேலும், முதியோர் காப்பகத்திற்கு உரிய கட்டமைப்பு வசதிகள் எதுவும் செய்யாமல் இருந்ததும், ஒரு முதியவருக்கு 4000 முதல் 15000 ரூபாய் வரை பராமரிப்பு கட்டணம் வசூலித்ததும், தெரிய வந்தது.

முதியோர் காப்பகம் நடத்த சமூக நலத்துறையிடம் விண்ணப்பித்து உள்ளதாக காப்பக உரிமையாளர்கள் கூறியதை தொடர்ந்து, அவர்களிடம் எழுத்துப்பூர்வ வாக்குமூலம் பெற்றுக்கொண்டு, அவர்களின் விண்ணப்பம் குறித்து ஆய்வு செய்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Published by:Esakki Raja
First published:

Tags: Madurai