மீண்டும் அண்ணா, வேண்டும் அண்ணா; விஜய் படத்தை மார்ஃபிங் செய்து போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்

ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்

அண்ணா பிறந்த நாள் அன்று மதுரையில் விஜய் ரசிகர்கள் இந்த போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.

 • Share this:
  மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 113-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், சசிகலா உள்ளிட்டோர் அவரது படத்திற்கு மலர் தூவியும், சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இதனிடையே மதுரையில் அண்ணா உருவத்தை மார்ஃபிங் செய்து விஜய்யின் படத்தை வைத்து ரசிகர்கள் ஒட்டி உள்ள போஸ்டர் அனைவரது கவனத்தையும் திருப்பி உள்ளது.

  விஜய் ரசிகர்கள் ஒட்டி உள்ள போஸ்டரில், நாட்டிற்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார், பொது நலத்தில் தானே முழுக்க கண்ணாயிருந்தார்... எங்கள் கடன் தீர மீண்டும் அண்ணா, தமிழர் நீங்கள் வேண்டும் அண்ணா என்றுள்ளனர்.

  ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்


  அண்ணா பிறந்த நாள் அன்று மதுரையில் விஜய் ரசிகர்கள் இந்த போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் பலர் ஆர்வத்தில் உள்ளனர். விஜய்யின் படங்களில் அரசியல் வசனங்கள், காட்சிகள் இடம்பெற்று வந்தாலும் அவர் அரசியலுக்கு வருவது குறித்து இதுவரை எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறார்.

  விஜய் தற்போது நெல் தீலிப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் நிறைவடைய உள்ளது. 'பீஸ்ட்' படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்பதால் படத்தின் புரமொஷன் பணிகளை 'அண்ணாத்த' படம் வெளியான பிறகே தொடங்கவுள்ளனர். பீஸ்ட்' பொங்கலையொட்டி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: