Home /News /tamil-nadu /

"30 நபர் மீது 549 பொய் வழக்குகள்": குறவர் சமூகத்தினர் குறித்து வெளியிடப்பட்ட அதிர்ச்சி ஆய்வறிக்கை!

"30 நபர் மீது 549 பொய் வழக்குகள்": குறவர் சமூகத்தினர் குறித்து வெளியிடப்பட்ட அதிர்ச்சி ஆய்வறிக்கை!

குறவர் சமூகத்தினர் குறித்து வெளியிடப்பட்ட அதிர்ச்சி ஆய்வறிக்கை!

குறவர் சமூகத்தினர் குறித்து வெளியிடப்பட்ட அதிர்ச்சி ஆய்வறிக்கை!

மதுரையை சேர்ந்த போப் (Pope- People's organization for people education) என்ற தன்னார்வ நிறுவனம் குறவர் இன மக்கள் மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரி பகுதிகளில் கடந்த 2021 நவம்பர் மாதம் ஒரு ஆய்வை மேற்கொண்டது.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
குறவர் சமூக மக்கள் மீது பதியப்பட்ட பொய் வழக்குகள் குறித்து தன்னார்வ நிறுவனம் நடத்திய ஆய்வில் தஞ்சை, கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த 30 நபர்கள் மீது 549 வழக்குகள் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது.

மதுரையை சேர்ந்த போப் (Pope- People's organization for people education) என்ற தன்னார்வ நிறுவனம் குறவர் இன மக்கள் மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரி பகுதிகளில் கடந்த 2021 நவம்பர் மாதம் ஒரு ஆய்வை மேற்கொண்டது.

அந்த ஆய்வின் முடிவுகள் அடங்கிய அறிக்கையையும், ஆவணப்படத்தையும் வெளியிடும் நிகழ்வு தமிழ்நாடு ஓட்டலில் நடைபெற்றது. இந்திய மாதர் தேசிய சம்மேளன பொது செயலாளர் ஆணிராசா ஆய்வறிக்கை நூலை வெளியிட்டார்.

குறவர் சமூகத்தை சேர்ந்த 30 நபர்களை தேர்வு செய்து நடத்தப்பட்ட ஆய்வில், அவர்கள் மீது மொத்தம் 549 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், அதில் 262 வழக்குகளில் விடுதலையும், 38 வழக்குகளில் தண்டனையும் பெறப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது.

ஆய்வு குறித்து இந்திய மாதர் தேசிய சம்மேளன பொது செயலாளர் ஆணிராசா அளித்த பேட்டி :

குறவர் சமூகம் நெடுங்காலமாக காவல்துறையின் கொடுமைகளுக்கு உள்ளாகி வருகிறது. 2021 நவம்பரில் 30 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அவர்கள் மீது 1994 ஆம் ஆண்டு முதல் தற்போது வரைக்கும், 18 வயது முதல் 60 வயது வரை வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அந்த 30 நபர்களில், 5 பேர் மீது மட்டும் குற்றம் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, 18 முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் மீது தான் காவல்துறை அதிகமான பொய் வழக்கு போட்டு சித்ரவதை செய்கிறார்கள். அவர்கள் மீது என்ன வழக்கு பதிகிறார்கள், அவர்களை எங்கு வைத்திருக்கிறார்கள் என்ற தகவல்களை கூட குடும்பத்தினருக்கு தெரிவிப்பதில்லை.

ஜனநாயக உரிமைகளை அதிகம் பேசுகிற தமிழகத்தில் இந்த கொடுமைகள் நடைபெற்று வருவது வேதனை அளிக்கிறது. பழங்குடி மக்களுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் அவர்களுக்கு முழுமையாக வந்து சேர்கின்றனவா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Also read... கோடநாடு வழக்கு: அதிமுக பிரமுகர் சஜீவனிடம் 2வது நாளாக தொடரும் விசாரணை

இன்றும் அநீதிகளை எதிர்கொண்டு வரும் குறவர் சமூகத்திற்கு, அவர்களுக்கூறிய நியாயம் கிடைக்கப்பட வேண்டும். இந்த 30 பேர் பதியப்பட்ட வழக்குகள் அனைத்தையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின், அரசு தனி கவனம் எடுத்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஆய்வறிக்கையின் அடிப்படையில் போப் தன்னார்வ அமைப்பு அரசுக்கு அளிக்கும் பரிந்துரைகள்:

குறவர் இன மக்கள் மீது திட்டமிட்டு நடத்தப்படும் மனித உரிமை மீறல்களை தடுக்க தனியாக பட்டியல் சாதியினர் ஆணையம் ஏற்படுத்த வேண்டும்.

காவல்துறை அல்லாத மனித உரிமை ஆர்வலர்களை தொடர்பு கொள்ளும் வகையில் அவசர உதவி எண் ஒன்றை அரசு அறிவிக்க வேண்டும்.

காவல் நிலையங்கள் அனைத்திலும் சிசிடிவி அமைக்க வேண்டும்.

குறவர் உள்ளிட்ட பட்டியல் இன மக்களை அணுகுவது குறித்து அனைத்து மாவட்டங்களிலும் காவலர்களுக்கு கட்டாய பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

குறவர் சமூக மக்களை கைது செய்யும் போதும் டி.கே.பாசு (மேற்குவங்கம்) வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட 11 கட்டளைகளை காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டும்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Madurai

அடுத்த செய்தி