Home /News /tamil-nadu /

அலங்காநல்லூர் ஜல்லிகட்டு: 21 காளைகளை அடக்கி முதல் பரிசான காரை தட்டிச்சென்ற கார்த்தி!

அலங்காநல்லூர் ஜல்லிகட்டு: 21 காளைகளை அடக்கி முதல் பரிசான காரை தட்டிச்சென்ற கார்த்தி!

Alanganallur jallikkattu | சிறந்த காளைக்கான முதல் இடம் புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சியை சேர்ந்த தமிழ்ச்செல்வத்தின காளைக்கு வழங்கப்பட்டது.

Alanganallur jallikkattu | சிறந்த காளைக்கான முதல் இடம் புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சியை சேர்ந்த தமிழ்ச்செல்வத்தின காளைக்கு வழங்கப்பட்டது.

Alanganallur jallikkattu | சிறந்த காளைக்கான முதல் இடம் புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சியை சேர்ந்த தமிழ்ச்செல்வத்தின காளைக்கு வழங்கப்பட்டது.

    உலகபுகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவுபெற்றது. 8 சுற்றுகளையும் மொத்தமாக சேர்த்து கிட்டத்தட்ட 1,000 காளைகள் அவிழ்த்து விடப்பட்டிருந்தன.

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 415 வீரர்களும்,1020 காளைகளும் விளையாடின. காலை 8 மணியளவில் தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெற்றது. அரசு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு ஒவ்வொரு சுற்றுக்கு 75 நபர்கள் வீதம் 8 சுற்றுகள் நடைபெற்றது.

    விறுவிறுப்பாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் எட்டு சுற்று முடிவில் 46 பேர் காயமடைந்தனர். அதில் 19 பேர் மாடுபிடி வீரர்கள். காளையின் உரிமையாளர்கள் 11 பேரும், பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள் உட்பட 16 நபர்கள் காயமடைந்தனர். இதில் மேல்சிகிச்சைக்காக 25 நபர்கள் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    Also read: பாலமேடு ஜல்லிக்கட்டு: 3வது முறையாக சிறந்த வீரருக்கான விருதை பெற்றார் பிரபாகரன்!

    போட்டியின் முடிவில் 21 காளைகளை பிடித்த கருப்பாயூரணி கார்த்திக் முதலிடம் பெற்றார். முதலிடம் பெற்ற கார்த்திக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து 19 காளைகளை பிடித்து இரண்டாம் இடம் பெற்ற அலங்காநல்லூரை சேர்ந்த ராம்குமாருக்கு இருசக்கர வாகனம் பரிசாக அளிக்கப்பட்டது. தொடர்ந்து, 13 காளைகளை அடக்கி மூன்றாவது இடம்பெற்ற சித்தாலங்குடி கோபால கிருஷ்ணனுக்கும் இருசக்கர வாகனம் பரிசாக அளிக்கப்பட்டது.

    இதேபோல், சிறந்த காளைக்கான முதல் இடம் புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சியை சேர்ந்த தமிழ்ச்செல்வத்தின காளைக்கு வழங்கப்பட்டது. அவருக்கு சிறந்த காளைக்கான முதல் பரிசான கார் வழங்ககப்பட்டது.

    சிறந்த காளைக்கான இரண்டாவது இடத்தை முன்னாள் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் எம்.முத்துராமலிங்கத்திற்கு வழங்கப்பட்டது. அவருக்கு இருசக்கர வாகனம் பரிசாக அளிக்கப்பட்டது. இதைபோல், சிறந்த காளைக்கான மூன்றாவது இடத்தை குலமங்கலம் வக்கீல் திருப்பதி பெற்றார், அவருக்கும் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

    மேலும் படிக்க: பொங்கல் விடுமுறைக்கு பிறகு கொரோனா அதிகரிக்க வாய்ப்பு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Alanganallur, Jallikattu, Pongal

    அடுத்த செய்தி