Home /News /tamil-nadu /

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதி மாற்றம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதி மாற்றம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

Alankanallur Jallikattu | அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் வருகிற 16-ம் தேதிக்கு பதில் 17-ம் தேதி நடைபெறும் என மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுகள் போன்று இல்லாமல் ஜல்லிக்கட்டுகள் போட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள், ஓர் இடத்தில் கலந்து கொண்டால் மற்றோர் இடத்தில் பங்கேற்க அனுமதி இல்லை. ஒவ்வொரு போட்டியிலும் தலா 700 மாடுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

    காளைகள் மற்றும் வீரர்களுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம். இ-சேவை மையங்களில் பதிவு செய்யலாம். மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்களுக்கு காலை, மதியம் இரண்டு வேளை உணவு வழங்கப்படும். தற்காலிக கழிப்பறை வசதியும் ஏற்பாடு செய்து தரப்படும் என்று அமைச்சர் மூரத்தி தெரிவித்திருந்தார்.

    உலகப்புகழ் பெற்ற அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 16-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டுக்காக வாடிவாசல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வரும் 16-ம் தேதி முழுஊரடங்கு என்பதால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17-ம் தேதி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    Also Read : கொரோனா சோதனை கட்டணத்தை ரூ.500ஆக குறைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

    மேலும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்பதிவு இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Jallikattu, Madurai

    அடுத்த செய்தி