மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை உடனடியாக துவங்க வேண்டும் - எம்.பிக்கள் கோரிக்கை

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை உடனடியாக துவங்க வேண்டும் - எம்.பிக்கள் கோரிக்கை

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை உடனடியாக துவங்கப்படாவிடில், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எம்பிக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறியுள்ளனர்.

  • Share this:
    மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தினை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி இரண்டரை ஆண்டுகளாகியும், கட்டிட பணிகள் இன்னும் தொடங்கப்படாத நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், வெங்கடேசன் ஆகியோர் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை பார்வையிட்டனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் விருதுநகர் எம்பி மாணிக் தாகூர் கூறியதாவது, இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னால் கட்டிட பணி துவங்கி உள்ளதா என்பதைப் பார்க்க வந்தோம்.

    கட்டிட பணி துவக்க படவில்லை என்ற வருத்தமான நிலையில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளது. இதனை நாங்கள் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளோம். தமிழகத்தில் ஒவ்வொருவருடைய பங்களிப்பும் இதற்கு தேவை. அரசியல் பார்க்காமல் பாஜகவை சேர்ந்தவர்களும் இதனை வலியுறுத்தவேண்டும் என விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனைத் தொடர்ந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளரிடம் கூறியதாவது, எய்ம்ஸ் மருத்துவமனையை பொறுத்தவரை இன்றுவரை கட்டட பணி தொடங்கவில்லை. குறிப்பாக 2023 ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் துவக்கப்படும் என்று மத்திய அரசின் அமைச்சரவை முடிவு  எடுத்தது. ஆனால் இன்று வரை எவ்வித வேலையும் நடைபெறவில்லை.

    2023 - 24ஆம் ஆண்டு துவங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட ஜம்மு எய்ம்ஸ், மங்கலகிரி எய்ம்ஸ், இவிகுளம் எய்ம்ஸ் ஆகிய மூன்று எய்ம்ஸ்களில் கடந்த ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கை ஆரம்பிக்கப்பட்டு விட்டது. ஆனால் இங்கு மருத்துவ மாணவருக்கான சேர்க்கையும் நடைபெறவில்லை. கட்டிட பணியும் நடைபெறவில்லை.

    Also read: அமைச்சர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் வழக்கு!

    இந்த கல்வி ஆண்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை துவங்கப்பட வேண்டும் என்பது முதல் கோரிக்கை, இரண்டாவது கோரிக்கையாக உடனடியாக கட்டிடப் பணிகள் துவங்கப்பட வேண்டும், அடுத்த மாதம் ஜூலை கடைசியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் உள்ளது. இந்த ஆண்டு கல்வி சேர்க்கை நடைபெற வேண்டும், அப்படி துவக்க மறுக்கின்ற பட்சத்தில் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்த பிரச்சினையை வலிமையாக கொண்டு செல்வோம். மேலும் டெல்லியில் போராட்டங்களை நடத்துவோம் என்று கூறினார்.

    செய்தியாளர் - சிவக்குமார்
    Published by:Esakki Raja
    First published: