அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் மதுரையில் வைத்து விசாரணை நடந்து வருகிறது.
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி கடந்த மே 28ம் தேதி சென்னை காவல் ஆணையரிடம் பாலியல் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில்,
அமைச்சர் மணிகண்டனும் தானும் கணவன்-மனைவியைப் போல ஐந்து ஆண்டுகள் வாழ்ந்ததாகவும், மூன்று முறை கர்ப்பமடைந்த போதிலும், அவரது மிரட்டலால் அந்த கருவைக் கலைத்ததாகவும் கூறியிருந்தார். மேலும், தன்னை திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையிலேயே அவருடன் ஒன்றாக வாழ்ந்ததாகவும், ஆனால், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதுடன், கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் சாந்தினி கூறியிருந்தார்.
Also Read: Google map: கூகுள் மேப் காட்டிய ஷார்ட் ரூட்.. வயல்வரப்பில் சாகசப்பயணம்.. ஜெர்மன் டூரிஸ்ட்-க்கு ராஜஸ்தானில் நேர்ந்த அனுபவம்
அந்தப் புகார் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டு, 6 பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மணிகண்டன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.ஆனால், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால்,
தலைமறைவான மணிகண்டனைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
பின்னர் கடந்த மாதம் 20-ந்தேதி அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மணிகண்டன் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.மணிகண்டனிடம் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் போலீஸ் காவலுக்கு அனுமதிக்கும்படி போலீஸ் தரப்பில் சைதாப்பேட்டை கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். ஆனால் அந்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதையடுத்து மணிகண்டன் ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு செய்தார். அந்த மனுவில், தன் மீது கூறப்பட்ட புகாரில் எந்த உண்மையும் இல்லை. நான் யாரையும் ஏமாற்றவில்லை. புகார் கொடுத்துள்ள சாந்தினிக்கு ரூ.5 லட்சம் கடன் கொடுத்திருந்தேன். அதை திருப்பி கேட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இவ்வாறு பொய் புகார் கொடுத்துள்ளார்’ என்று கூறி இருந்தார்.இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பிலும் மணிகண்டனை போலீஸ் விசாரணைக்கு உட்படுத்த அனுமதி கேட்டு மனு செய்து இருந்தனர்.
Also Read: கடலுக்கு அடியில் பயங்கரம்.. தண்ணீரில் கொளுந்துவிட்டு எரிந்த தீ - மிரள வைக்கும் வீடியோ காட்சிகள்
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி மணிகண்டனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் சைதாப்பேட்டை கோர்ட்டு பிறப்பித்து இருந்த உத்தரவை ரத்து செய்து இரண்டு போலீஸ் காவலுக்கு அனுமதித்தனர்.இதையடுத்து மணிகண்டனை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். நேற்று சென்னையில் மணிகண்டனிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று முன்னாள் அமைச்சர் மணிகண்டனை விசாரணைக்காக மதுரைக்கு அழைத்துச்சென்றனர். மதுரை எஸ்.எஸ் காலனி காவல்நிலையத்தில் வைத்து மணிகண்டனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.