ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஜல்லிக்கட்டு போட்டியை நிறுத்திடுங்க.. நடிகர் வேல. ராமமூர்த்தி ஆவேசம்

ஜல்லிக்கட்டு போட்டியை நிறுத்திடுங்க.. நடிகர் வேல. ராமமூர்த்தி ஆவேசம்

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

150 பார்வையாளர்களுடன் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு நடத்தாமல் இருக்கலாம் திரைப்பட நடிகர் வேலராமமூர்த்தி

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தமிழர்களின் அடையாளமாக ஜல்லிக்கட்டு போட்டி ஏற்கனவே உள்ள நடைமுறைகளின் படி நடத்த வேண்டும் என வேல. ராமமூர்த்தி கூறியுள்ளார்.

  மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 14-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகமே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதால் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாடுகள் கொண்டுவரும் பாதை, ஜல்லிக்கட்டு விழா நடைபெறும் இடம், மேடை அமைக்கும் பகுதி மற்றும் வீரர்களுக்கு வருவதற்கான பாதை, ஜல்லிக்கட்டு காளைகள் வெளியேறும் இடம் அனைத்து இடங்களும் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  Also Read: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான தேதி மாற்றம்

  விழா நடைபெறும் இடத்தை வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர். காவல்துறை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிக்கும் நபர்கள் மட்டுமே போட்டியை பார்வையிட வேண்டும் வெளியூரில் இருந்து வருகைதரும் உறவினர்களை அனுமதிக்கக் கூடாது என்று துண்டுபிரசுரம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

  இதைதொடர்ந்து துண்டு பிரசுரத்தை பெற்றுக்கொண்ட திரைப்பட நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், “இந்த ஆண்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி அளித்துள்ளது. போட்டியை காண 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. காரணம் ஜல்லிக்கட்டு போட்டி என்பது தமிழர்களின் கலாச்சார அடையாளத்தின் ஒன்றாக உள்ளது .

  Also Read:  சிவகங்கையில் சேவல் சண்டைக்கு தயாராகும் சேவல்கள்..!

  பார்வையாளர்கள் இல்லாமல் போட்டியை நடத்துவதற்கு அரசு ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்து இருக்கலாம். வெறும் 150 பார்வையாளர்கள் என அறிவித்துள்ளார்கள். அதில் எந்த 150 பேரை ஜல்லிக்கட்டு போட்டியை காண அனுமதிக்கப் போகிறார்கள் என்பதில் பல்வேறு குழப்பம் நீடிக்கும். மேலும் ஜல்லிக்கட்டு போட்டியை காண ஆட்கள் இல்லாமல் காளை மாடுகளை அவிழ்த்துவிட மாட்டின் உரிமையாளர்களும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். எனவே தமிழக அரசு தமிழர்களின் அடையாளமாக ஜல்லிக்கட்டு போட்டி ஏற்கனவே உள்ள நடைமுறைகளின் படி நடத்த வேண்டும். இல்லையென்றால் ஜல்லிக்கட்டு போட்டியை நிறுத்திவிடலாம் என தெரிவித்தார்.

  செய்தியாளர்: சிவக்குமார் (மதுரை)

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Jallikattu, Madurai, Pongal, Pongal festival, Tamilnadu, Tamilnadu government