Home /News /tamil-nadu /

மதுரையில் குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 168 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

மதுரையில் குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 168 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

குடியரசு தினம் 2022

குடியரசு தினம் 2022

Madurai : மதுரையில் விதிகளை பின்பற்றாமல் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 82 கடைகள், 81 உணவகங்கள், 5 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மதுரையில் குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத, 168 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தமிழக அரசின் தொழில் நிறுவனங்கள் சட்டப்படி, தேசிய விடுமுறை நாளான குடியரசு தினத்தன்று கடைகள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.

அவ்வாறு தொழிலாளர்களை அனுமதிக்கும்பட்சத்தில், அவர்களுக்கு இரட்டிப்புச் சம்பளம் அல்லது வேறொரு நாளில் மாற்று விடுப்பு அளிக்க வேண்டும். அதன் விவரத்தை விடுமுறை தினத்துக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக, சம்பந்தப்பட்ட தொழிலாளர் துறை அலுவலகத்தில் உரிய படிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

குடியரசு தினத்தையொட்டி, மேற்படி விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

Must Read : அவிநாசி அருகே பதுங்கியிருக்கும் சிறுத்தையின் காலடித்தடம், எச்சங்கள் கண்டுபிடிப்பு

அப்போது மதுரையில் விதிகளை பின்பற்றாமல் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்திய 82 கடைகள், 81 உணவகங்கள், 5 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 168 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Published by:Suresh V
First published:

Tags: Madurai, Republic day

அடுத்த செய்தி