ஆடி மாதம் இந்தாண்டு அசைவ பிரியர்களுக்கு கொண்டாட்டமாகத்தான் உள்ளது. வழக்கமாக ஜவுளிக்கடைகளில் ஆடிச் சலுகைகள் அள்ளி வீசப்படும் காலம் மாறி தற்போது இறைச்சி கடைகள் போட்டி போட்டுக் கொண்டு சலுகையை வாரி வழங்கி வருகின்றன. அந்த வகையில் திருமங்கலத்தில் மகிழ்வித்து மகிழ் என்ற இறைச்சி கடையில் ஒரு கிலோ இறைச்சி வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என அதிரடியாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
குறைவான விலைக்கு நாட்டுக் கோழி, கருங்கோழி, நாட்டு வாத்து, முயல், வான்கோழி, காடை போன்றவைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கடையில் ஒரு கிலோ இறைச்சி வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான டோக்கன் வழங்கப்படுகிறது. ஆடி மாதம் முழுவதும் இந்த சலுகை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.