• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மதுரையில் 75 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது

மதுரையில் 75 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது

கைது செய்யப்பட்ட இளைஞர்

கைது செய்யப்பட்ட இளைஞர்

மதுரை சோழவந்தானில் 75 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • Share this:
    மதுரை மாவட்டம் சோழவந்தான் மாணிக்கம் பிள்ளை பேட்டையைச் சேர்ந்த திருமலை என்ற 75 வயது மூதாட்டி திருமணம் ஆகாமல் ஆதரவற்ற நிலையில் வாழ்ந்து வந்தார். இவருடைய சகோதரி மகன் பாண்டி என்பவர் மாதம் ஒருமுறை வந்து பார்த்துவிட்டு செலவுக்கு பணம் கொடுத்துவிட்டு சென்றதாக தெரிகிறது.

    இதுபோக மூதாட்டி திருமலை, சோழவந்தானில் உள்ளகோவிலின் அன்னதானம் மற்றும் தெரிந்தவர்களிடம் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். இரவு நேரத்தில் மார்க்கெட் ரோட்டில் உள்ள ஜவுளிக்கடை அடைத்த பிறகு அங்கு இரவில் தூங்கி காலையில் எழுந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதேபோல் நேற்றைய முன்தினம் இரவு அதே ஜவுளிக்கடையில் படுத்து தூங்கி கொண்டுள்ளார். அதிகாலை 3 மணி அளவில் ரோந்து பணிக்கு வந்த போலீசார் மூதாட்டி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து சோழவந்தான் போலீசார் அங்கிருந்த நகைக்கடை சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது நடு இரவில் இளைஞர் ஒருவர் மூதாட்டியை தூக்கிச் செல்வது போலவும் பின்னர் போலீசார் வந்து இளைஞரை அழைத்து விசாரித்து இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு செல்வது போலவும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு சோழவந்தான் போலீசார் விசாரிக்கையில், அந்த இளைஞரே மூதாட்டியை கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். பிடிபட்ட இளைஞர் ஏற்கனவே சில வழக்குகளில் குற்றவாளியாக இருந்து சிறை தண்டனை அனுபவித்து ஐந்து நாட்களுக்கு முன்பாக வெளியே வந்ததாகவும் அவர் பெயர் மணிமாறன்(30,) கருப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதுகுறித்து சமயநல்லூர் துணை மாவட்ட கண்காணிப்பாளர் பாலசுந்தர், இன்ஸ்பெக்டர் சிவபாலன்,சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் உட்பட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். மூதாட்டி உடலை கைப்பற்றி சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்து உறவினரிடம் பிணத்தை ஒப்படைத்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: