Home /News /tamil-nadu /

மதுபானங்களை ஏற்றி வந்த சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து.. போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச்சென்ற மதுப்பிரியர்கள்

மதுபானங்களை ஏற்றி வந்த சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து.. போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச்சென்ற மதுப்பிரியர்கள்

உடையாமல் தப்பிய பாட்டில்களை அள்ளிச் சென்ற மதுப்பிரியர்கள்

உடையாமல் தப்பிய பாட்டில்களை அள்ளிச் சென்ற மதுப்பிரியர்கள்

விபத்தில் 10 இலட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் ரோட்டில் உடைந்து  மதுபான ஆறாக ஓடியது.

  • News18
  • Last Updated :
மதுரையில் மதுபான சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட நிலையில் சாலையில் சிதறிக் கிடந்த மதுபாட்டில்களை போட்டி போட்டு எடுத்து சென்றனர் மதுபிரியர்கள்.

மதுரை அருகே உள்ள மணலூர் மதுபான குடோனில் இருந்து மதுரை மாநகருக்கு 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் சரக்கு வேனில் ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி வந்த சரக்கு விரகனூர் சுற்றுச்சாலை அருகே நான்கு வழிச்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Also read... மூதாட்டியிடம் நகைபறிப்பு... சாப்பாடு போட்ட என்கிட்டயே நகை பறிச்சுட்டானே என கண்ணீர்

இந்த விபத்தில் 10 இலட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் ரோட்டில் உடைந்து  மதுபான ஆறாக ஓடியது. மதுபான சரக்கு வேன் கவிழ்ந்ததையடுத்து அந்த சாலையில் சென்ற மது பிரியர்கள் ஓடோடி வந்து  சிதறி கிடந்த மது பாட்டில்களை போட்டி போட்டுக்கொண்டு எடுத்து சென்றனர்.இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த சிலைமான் போலீசார் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Madurai

அடுத்த செய்தி