ரம்ஜான் புனித இரவு: மதுரையில் 2000 பேருக்கு பிரமாண்ட பிரியாணி விருந்து
ரம்ஜான் புனித இரவு: மதுரையில் 2000 பேருக்கு பிரமாண்ட பிரியாணி விருந்து
மதுரையில் 2000பேருக்கு பிரியாணி விருந்து
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று நோன்பு. ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் 30 நாட்களும் பகலில் உணவு உண்ணாமல், நீர் பருகாமல், தான தர்மங்களை அளித்து இஸ்லாமியர்கள் நோன்பை கடைபிடிப்பார்கள்.
ரம்ஜான் புனித இரவு நாளையொட்டி மதுரையில் 2000பேருக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று நோன்பு. ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் 30 நாட்களும் பகலில் உணவு உண்ணாமல், நீர் பருகாமல், தான தர்மங்களை அளித்து இஸ்லாமியர்கள் நோன்பை கடைபிடிப்பார்கள்.
இந்த மாதத்தில் 27 தொழுகை நாளான நேற்று லைலத்துல் ஹதர் என்னும் புனித இரவு இஸ்லாமியர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் தான் குர்ஆன் என்னும் நூலை இறைவன் கொடுத்ததாகவும் இஸ்லாமியர்களால் நம்பப்படுகிறது.
இதையொட்டி, மதுரை மாப்பாளையம் ஜின்னா திடலில் நேற்று 2000பேருக்கு சஹர் விருந்து அளிக்கப்பட்டது. தென்தமிழகத்தில் முதல்முறையாக 2000 பேருக்கு சஹர் விருந்தில் சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டது.
இதில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும், மதபாகுபாடு இல்லாமல் பலரும் சஹர் விருந்தில் கலந்துகொண்டு பிரியாணி சாப்பிட்டனர். மதுரையில் முதல்முறையாக நடைபெற்ற பிரம்மாண்ட சஹர் விருந்து நள்ளிரவு 2 மணிக்கு தொடங்கி அதிகாலை 4 மணி வரை நடைபெற்றது. இதனையடுத்து இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகையில் ஈடுபட்டனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.