சமண சமயத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் துறவறம் மேற்கொள்ள உள்ளார்!
சமண சமயத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் துறவறம் மேற்கொள்ள உள்ளார்!
17 வயது சிறுவன் துறவறம் மேற்கொள்ள உள்ளார்
17 வயது சிறுவர் சிவம் குதிரை பூட்டிய சாரட் வண்டியில் அமர வைக்கப்பட்டு மதுரை நகர் பகுதியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு சமண வழிபாட்டு தலத்தில் உரிய முறைப்படி வழியனுப்பு விழா நடந்தது.
மதுரையில் சமண மதத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவர் தனது பெற்றோரின் சம்மதத்துடன் துறவறம் மேற்கொள்ள உள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜெயின் சமூகத்தினர் மதுரை நகர் பகுதியில் பல ஆண்டுகளாக வசிக்கின்றனர் . பல ஆண்டுகளாக அவர்கள் மதுரையில் வசித்தாலும் தொடர்ந்து தங்கள் பாரம்பரிய முறைப்படி சமண சமய கோட்பாடுகளை முறைபடி கடைபிடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரை நகரில் வசிக்கும் சமண சமயத்தைச் சார்ந்த 13 வயது சிவம் என்ற சிறுவரின் துறவறம் பூணும் திருவிழா மதுரையில் நடந்தது. மதுரையைச் சேர்ந்த மனீஷ் ஜெயின், அபக் ஷா ஜெயின் இவர்களின் 17 வயது மகன் சிவம் . பெற்றோர் சம்மதத்துடன் துறவறம் மேற்கொள்ள சம்மதித்தார்.
இதை தொடர்ந்து, துறவறம் பூணும் திருவிழா இன்று மதுரையில் நடைபெற்றது. 17 வயது சிறுவர் சிவம் குதிரை பூட்டிய சாரட் வண்டியில் அமர வைக்கப்பட்டு மதுரை நகர் பகுதியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு சமண வழிபாட்டு தலத்தில் உரிய முறைப்படி வழியனுப்பு விழா நடந்தது.
வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி சென்னையில் உள்ள சமண கோவிலில், தனது குருநாதர் தீர்த்து சூரிஸ்வர் உடன் துறவரம் மேற்கொள்கிறார். இந்த துறவறம் பூணும் திருவிழாவில் திருவிழாவில் திரளான ஜெயின் சமூகத்தினர் கலந்து கொண்டனர்
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.