ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

"94"... - 96 பட பாணியில் மதுரையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு! 

"94"... - 96 பட பாணியில் மதுரையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு! 

"94"... - 96 பட பாணியில் மதுரையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு! 

"94"... - 96 பட பாணியில் மதுரையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு! 

அந்த காலத்தை மீண்டும் ஒரு முறை நினைவு கொள்ளலாம் என்ற நோக்கத்தில் இந்த முயற்சியை எடுத்தோம். ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில் அனைவரும் குடும்பத்துடன் வந்திருந்து பழைய நினைவுகளில் நீந்த வைத்து விட்டார்கள்" என்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மதுரை மாவட்டம் சோழவந்தானில் 27 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் குடும்பத்தினருடன் சந்தித்து, மலரும் நினைவுகளுடன் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மதுரை மாவட்டம்  சோழவந்தானில் அரசு உதவிபெறும் ஆர்.சி.நடுநிலைப்பள்ளியில் 1994 ஆம் ஆண்டு எட்டாம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் தங்களின் குடும்பத்தினருடன் சந்தித்து பள்ளி காலங்களில் நடந்த மலரும் நினைவுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

இவ்விழாவில் ஒவ்வொருவரும் தங்களின் கடந்த கால நினைவுகளையும், தற்போதைய சூழ்நிலைகளையும் கலந்துரையாடினர். தொடர்ந்து முன்னாள் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

Also read: மகள் கொடுத்த சர்ப்ரைஸ்.. மகிழ்ச்சியில் ரஜினிகாந்த்!!

மேலும், பள்ளியின் தரத்தை உயர்த்துவது பற்றியும், பள்ளியின் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு நினைவுக் கேடயம் வழங்குதல், பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உதவிகள் செய்தல், வாழ்வில் பின்தங்கிய தங்களின் சக மாணவனுக்கு உதவுதல் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் விவாதித்தனர்.

முன்னாள் மாணவர்கள் பேசுகையில், "முன்னாள் மாணவர்கள் சந்திப்பு குறித்து செய்திகளில் பார்க்கையில், நாமும் இது போன்று சந்திக்கலாமே என தோன்றியது. 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை ஒன்றாகவே பயின்ற மாணவர்கள் நாங்கள்.

நாங்கள் 8 ஆம் வகுப்பு பயின்ற 1994 ஆம் வருடத்தை எங்கள் வாழ்வில் மறக்கவே முடியாது. அது அவ்வளவு இன்பமான ஒரு காலம். அந்த காலத்தை மீண்டும் ஒரு முறை நினைவு கொள்ளலாம் என்ற நோக்கத்தில் இந்த முயற்சியை எடுத்தோம். ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில் அனைவரும் குடும்பத்துடன் வந்திருந்து பழைய நினைவுகளில் நீந்த வைத்து விட்டார்கள்" என்றனர்.

Also read: ஊரடங்கால் இருண்டு போன ஒலி, ஒளி அமைப்பாளர்களின் வாழ்வு!

மேலும், "இப்போது பள்ளியில் படிக்கும் பல மாணவர்கள் ஏழ்மையான நிலையில் உள்ளனர். அவர்களுக்கு எங்களால் முடிந்த பொருளாதார உதவிகளை செய்யலாம் என்ற எண்ணம் உள்ளது. நாங்கள் பயின்ற இந்த பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வெகு நாட்களாகவே உள்ளது" என்று கூறியவர்கள், தாங்கள் பட்ட அத்தனை கஷ்டங்களும் இந்த சந்திப்பின் போது காணாமல் போய், புத்துணர்வு பிறந்துள்ளதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

First published:

Tags: 96 movie, Govt School, Madurai