Home /News /tamil-nadu /

மதுரையில் பிறந்து 6 நாட்களே ஆன பெண் சிசு படுகொலை? போலீசார் தீவிர விசாரணை

மதுரையில் பிறந்து 6 நாட்களே ஆன பெண் சிசு படுகொலை? போலீசார் தீவிர விசாரணை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பிறந்து 6 நாட்களே ஆன பெண் குழந்தை இறப்பில் மர்மம் உள்ளதாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது பெரியகட்டளை. இந்த ஊரை சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான முத்துப்பாண்டி (30). இவருடைய மனைவி கௌசல்யா (24). இந்தத் தம்பதிகளுக்கு ஏற்கனவே 4 வயது மற்றும் 2  வயதில் பெண் குழந்தைகள் உள்ளளன. இந்த நிலையில் மூன்றாவதாக கௌசல்யா கர்ப்பமாகியுள்ளார்.  கெளசல்யாவிற்க்கு கடந்த 21 ம்தேதி   சேடப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்குழந்தை  பிறந்ததுள்ளது

.இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தை இறந்துவிட்டதாக கூறி அந்த குழந்தை உடலை வீட்டின் முன்பு புதைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் சந்தேகம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர் முனியாண்டி சேடப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் சேடப்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து குழந்தை இயற்கையாக இறந்ததா? அல்லது பெண் சிசுக்கொலை செய்யப்பட்டதா? என்பது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் போலீசார் விசாரணைக்கு வருவதை அறிந்து கொண்ட முத்துப்பாண்டி கௌசல்யா தம்பதியினர் தங்கள் குழந்தைகளோடு தலைமறைவாகினர். போலீசார் பெண்சிசு புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி எடுப்பதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர் பெண் சிசுவின் உடல் இன்றோ அல்லது நாளையோ தோண்டி எடுக்க வாய்ப்பு உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.
Published by:Vijay R
First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Madurai

அடுத்த செய்தி