மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் செயல்படும் இதயம் என்ற தனியார் ஆதரவற்றோர் காப்பகத்தில் ஐஸ்வர்யா என்பவருடைய ஒரு வயது ஆண் குழந்தை வளர்க்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் குழந்தை அண்மையில் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாகவும் முறைப்படி ஆவணங்களை பெற்றுக்கொண்டு மயானத்தில் உடலை அடக்கம் செய்ததாகவும் உறவினர்களிடம் காப்பக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக குழந்தையின் குடும்பத்தினர் தரப்பில் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டதில், மதுரையில் கடந்த சில நாட்களாக எந்த குழந்தையும் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை என்பது தெரியவந்தது. இதற்கிடையே இதயம் காப்பகத்தில் இருந்த 2 வயது பெண் குழந்தையும் காணாமல் போனது தெரியவந்தது.
Also Read : புனேவில் இருந்து 4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி சென்னை வந்தது
அதைத்தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில், ஒரு வயது ஆண் குழந்தையை மதுரை இஸ்மாயில்புரத்தில் நகைக்கடை வைத்துள்ள, கண்ணந்பவானி தம்பதிக்கு் 5 லட்சம் ரூபாய்க்கு விற்றது தெரியவந்தது. மற்றொரு பெண் குழந்தையை கருப்பாயூரணி கல்மேடு பகுதியை சேர்ந்த சகுபார் சாதிக் - அனீஷ் தம்பதிக்கு விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தல்லாகுளம் போலீசார் இரு குழந்தைகளையும் மீட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காப்பக நிர்வாகிகள் மற்றும் குழந்தைகளை வாங்கிய நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பச்சிளம் குழந்தைகளை பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த விவகாரத்தில் காப்பக உரிமையாளர் கலைவாணி, இரண்டு இடை தரகர்கள், இரண்டு தம்பதிகள் என மொத்தம் 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் கலைவாணி என்பவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கையால் "மாநில இளைஞர் விருது" வழங்கப்பட்டுள்ளது.இதே போல இந்த காப்பகத்தில் பணியாற்றிய அருண் என்பவருக்கும் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அதே "மாநில இளைஞர் விருது" அளிக்கப்பட்டுள்ளது.
Also Read : மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஜாக்பாட் செய்தி சொன்ன அமைச்சர் ஐ.பெரியசாமி
ஆதரவற்ற முதியோர்களை மீட்டமைக்காக இவர்களை பாராட்டி அப்போது இந்த விருதுகள் வழங்கப்பட்டு இருந்தாலும், தற்போது இந்த காப்பகத்தின் உரிமையாளர்கள் அனைவரும் குற்றவாளிகளாக உள்ள நிலையில் அந்த விருதுகளை திரும்ப பெற வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.