உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு சக காவலர்கள் இணைந்து ரூ.17லட்சம் நிதியுதவி.. மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்!!

மதுரை கீரைத்துறை காவல் நிலையத்தில் பணியாற்றி உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு போலீஸ் உறவுகள் ஒன்றிணைந்து ரூபாய் 17 லட்சம் நிதியுதவி வழங்கியது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.  

மதுரை கீரைத்துறை காவல் நிலையத்தில் பணியாற்றி உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு போலீஸ் உறவுகள் ஒன்றிணைந்து ரூபாய் 17 லட்சம் நிதியுதவி வழங்கியது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.  

 • Share this:
  தமிழகத்தில் பணியாற்றும் 2002ஆம் ஆண்டு காவலர்கள் ஒன்றிணைந்து உதவும் கரங்கள் என உருவாக்கி பணியில் இருக்கும் காவலர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குகிறார்கள்.

  தமிழகம் முழுவதும் 2002ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் 3500க்கும் மேற்பட்டோர் உதவும் கரங்கள் என ஒன்றிணைந்து தமிழகத்தில் எந்த ஒரு காவலர் பணியில் இறக்கும் போதோ, உடல்நிலை குறைவால் உயிரிழப்பு ஏற்பட்டாலோ, அவர்களின் குடும்பத்திற்கு தானாக முன்வந்து அனைவரும் தங்களுடைய பங்களிப்பாக நிதியை ஒதுக்கீடு செய்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியாக வழங்கப்பட்டு வருகிறது.

  இதன் ஒரு பகுதியாக திருமங்கலம் அருகே மேல உரப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசன்(44). இவர் மதுரை கீரைத்துறை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார்.

  அவரின் குடும்பத்திற்கு உதவும் கரங்கள் மூலமாக பெறப்பட்ட 17 லட்சம் ரூபாய் பணத்தை காவலர் கணேசன் குடும்பத்திற்கு ரூபாய் 17 லட்சத்திற்கான ஆவணங்களை காவலர்களின் உறவுகள் அவரின் குடும்பத்திற்கு வழங்கினர்.

  இந்த நெகிழ்வான நிகழ்ச்சியில் காவலர் கணேசன் குடும்பத்தினர் நிதியுதவியை கண்கலங்க ஏற்றுக் கொண்டனர்.

  செய்தியாளர் - சிவக்குமார்
  Published by:Esakki Raja
  First published: