மதுரை ஆவின் பண்ணையில் நாளொன்றுக்கு சராசரியாக 3.75 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, பால், தயிர், நெய் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று விற்பனைக்கு அனுப்பப்பட்ட பல ஆயிரம் லிட்டர் பால் கெட்டுப் போனதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, ஆவின் நிர்வாகம் விசாரணை மேற்கொண்டது.
ஆவின் உதவி பொது மேலாளர் தலைமையிலான குழு நடத்திய விசாரணையில், நேற்று பண்ணையில் பணியில் இருந்த துணை மேலாளர் சுக செல்வி மற்றும் ஆய்வக பணியாளர் வசந்தா ஆகியோர் பால் பதப்படுத்தும் பணிகளில் போது ஏற்பட்ட கவனக்குறைவால் 13 ஆயிரத்து 500 லிட்டர் பால் கெட்டுப் போனது தெரிய வந்தது.
Also read: முகக்கவசம் அணியாதவர்களை விரட்டி பிடித்து அபராதம் விதித்த மாவட்ட ஆட்சியர்!
மொத்தம் 23,000 லிட்டர் பால் இரண்டு பைப் வழியாக அனுப்பப்பட்டு உள்ளது. அதில் ஒரு பைப் வழியாக சென்ற 13,500 லிட்டர் பாலை சரியாக குளிர் பதப்படுத்தும் தொழில் நுட்பத்தில் ஊழியர்கள் இருவர் கவனக்குறைவாக இருந்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
விற்பனைக்கு அனுப்பட்ட அந்த 13,500 லிட்டர் பாலில், வாடிக்கையாளர்களின் புகாரின் அடிப்படையில் 400 லிட்டர் பால் திரும்ப பெறப்பட்டது. மேலும், இந்த இழப்பிற்கு காரணமான பண்ணை துணை மேலாளர் சுக செல்வி மற்றும் ஆய்வக பணியாளர் வசந்தா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.