நான்கு வழிச்சாலை பணிக்காக, நாற்றங்காலுக்கு தயாரான விளைநிலங்கள் சேதம்: விவசாயிகள் கொந்தளிப்பு

நான்கு வழிச்சாலை பணிக்காக நாற்றங்காலுக்கு தயாரான விளைநிலங்கள் சேதம்..

மதுரை அருகே நாற்றங்கால் பணிக்கு தயாராகிக் கொண்டிருந்த விளைநிலங்களை புற வழிச்சாலை பணிக்காக அத்துமீறி சேதப்படுத்திய சம்பவம் விவசாயிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
மதுரை மாவட்டம் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் சுற்றுச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாடிப்பட்டியில் தொடங்கும் சாலை தாமரைப்பட்டி வழியாக  மதுரை - திருச்சி,  மதுரை - ராமேசுவரம்,  மதுரை - தூத்துக்குடி,  மதுரை - கன்னியாகுமரி சாலைகளைக் கடந்து திருமங்கலம் அருகே ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இணைக்க திட்டமிடப்பட்டது.

இந்த சுற்றுச் சாலையானது சுமார் ரூ.700 கோடியில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு நான்கு பகுதி திட்டங்களாக நிறைவேற்றப்பட உள்ளது. இதற்காக மதுரை வடக்கு, மதுரை தெற்கு, வாடிப்பட்டி,  மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய வட்டங்களில் 84 கிராமங்களில் மொத்தம் 456.18 ஹெக்டேர் நிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்படுகின்றன.

இதில் முதல்கட்டமாக வாடிப்பட்டி முதல் தாமரைப்பட்டி வரை 30 கிமீ சாலை அமைக்கும் பணி துவங்கியுள்ளது. பெரும்பாலும் விவசாய நிலங்களே கையகப்படுத்தப்பட்ட நிலையில் அதற்கு அரசு தரப்பில் இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டது. கள்ளிவேலிபட்டி கிராமத்தை சேர்ந்த 50 விவசாயிகளின் நிலத்திற்கு செண்ட் ஒன்றுக்கு 4,150 ரூபாய் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் , அதே நிலத்தை ஒட்டியுள்ள அண்டை கிராமத்தின் நிலத்திற்கு 17,150 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

ஒரு அடி தூரத்தில் இருக்கும் நிலத்திற்கு வேறுவிதமான தொகையும், தங்களுக்கு மிக குறைந்த தொகை நிர்ணயித்ததற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவர்களுக்கும் அதே தொகையை வழங்குவதாக நில ஆர்ஜித பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் உறுதியளித்தனர். பாக்கித் தொகை வழங்கும் வரை பணிகளை மேற்கொள்ள மாட்டோம் என்றும் உறுதியளித்தனர்.

இதற்கிடையில் வைகை அணை திறக்கப்பட்டு ஒரு போக பாசனத்திற்கான நாற்றங்கால் அமைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு பொக்லைன் இயந்திரத்துடன் வந்த ஒப்பந்தக்காரர், விவசாயிகளின் வரப்புகளை உடைத்து விளைநிலத்தில் சாலை அமைப்பதற்கான பணியை துவக்கினார்.படிக்க... விவசாயிகளுக்கான நிதி உதவித் திட்டத்தில் மோசடி: உரிய நடவடிக்கை எடுத்துவருவதாக முதலமைச்சர் பழனிசாமி

இதை அறிந்து  ஆத்திரமடைந்த விவசாயிகள்சம்பவ இடத்திற்கு வந்து பொக்லைன் இயந்திரத்தை விரட்டியடித்தனர். பாக்கித் தொகை வழங்காமல் பணியை துவங்க மாட்டோம் என உறுதியளித்து அதிகாரிகள், அத்துமீறி உளவு பணிக்கு தயாராக இருந்த நிலங்களை சேதப்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்தனர். விளைநிலம் சேதப்படுத்தப்பட்டது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கவும் கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
Published by:Vaijayanthi S
First published: