மனைவி, குழந்தைகள் காலில் விழுந்து கெஞ்சியும் கணவரை கொன்ற கும்பல்...! மதுரையில் நடந்த கொடூர சம்பவம்

தலித் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து, சமயநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Web Desk | news18
Updated: July 11, 2019, 10:57 AM IST
மனைவி, குழந்தைகள் காலில் விழுந்து கெஞ்சியும் கணவரை கொன்ற கும்பல்...! மதுரையில் நடந்த கொடூர சம்பவம்
வெட்டிக் கொல்லைப்பட்ட தலித் இளைஞர்
Web Desk | news18
Updated: July 11, 2019, 10:57 AM IST
மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே ஓராண்டுக்குப் பின் சிறையில் இருந்து வெளிவந்த நபர் முன்விரோதம் காரணமாக தலித் இளைஞரை வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்துள்ளார்.

சமயநல்லூர் டி.சந்தை பகுதியைச் சேர்ந்த தலித் இளைஞர் நிரூபன் சக்கரவர்த்தி என்பவரின் தந்தையை, அதே பகுதியைச் சேர்ந்த முத்து இருள் என்பவர் கடந்த ஆண்டு தாக்கினார்.

இதனை தட்டிக்கேட்டதால் இருவருக்கும் முன்விரோதம் இருந்துவந்த நிலையில், திருட்டு வழக்கில் முத்து இருள் கடந்த ஆண்டு சிறை சென்றார். சிறையில் இருந்து சில நாட்களுக்கு முன் வெளிவந்த அவர், தலித் ஒருவர் தனக்கு விரோதமாக இருப்பதா என்ற நோக்கத்தில் பழிவாங்க எண்ணியதாக தெரிகிறது.

இந்நிலையில் திட்டமிட்டு ஹெல்மெட் அணிந்த 6 பேர் கொண்ட கும்பலுடன் சென்ற அவர், நள்ளிரவில் வீடு புகுந்து நிரூபன் சக்கரவர்த்தியை கொலை செய்ததாக கூறப்படுகிறது.

நிரூபன் சக்கரவர்த்தியின் மனைவி தனது குழந்தைகளுடன் காலில் விழுந்து கெஞ்சியும் அந்த கும்பல் கொடூர கொலையை அரங்கேற்றியுள்ளது. இதுகுறித்து சமயநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க... மனைவியிடம் போனில் பேசும்போது, தொண்டையில் பரோட்டா சிக்கியதால் உயிரிழந்த புது மாப்பிள்ளை

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...