மதுரை பெண் வட்டாட்சியர் விவகாரம்: சிபிஎம் வேட்பாளர் வெங்கடேசன் நீதிமன்றத்தில் முறையீடு

மதுரையில் ஆவண அறைக்குள் பெண் வட்டாட்சியர் நுழைந்ததை எதிர்த்து சு.வெங்கடேசன் உயர்நீதிமன்றத்தில் மனுத் தக்கல் செய்துள்ளார்.

மதுரை பெண் வட்டாட்சியர் விவகாரம்: சிபிஎம் வேட்பாளர் வெங்கடேசன் நீதிமன்றத்தில் முறையீடு
சு.வெங்கடேசன்
  • News18
  • Last Updated: April 26, 2019, 1:42 PM IST
  • Share this:
மதுரையில் வாக்குப்பதிவு ஆவண அறைக்குள் பெண் வட்டாட்சியர் நுழைந்ததை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

மதுரை மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு மருத்துவக் கல்லூரியில், வைக்கப்பட்டுள்ளன. இதன் அருகில், வாக்குப்பதிவு விவர ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள், பெண் வட்டாட்சியர் சம்பூரணம், ஆவண பதிவு எழுத்தர் சீனிவாசன், மாநகராட்சி ஊழியர்கள் ராஜபிரகாஷ், சூர்ய பிரகாஷ் ஆகியோர் சென்றதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பான விசாரணை அடிப்படையில், வட்டாட்சியர் சம்பூரணம், உள்ளிட்ட 4 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், ஆவண அறைக்குள் பெண் வட்டாட்சியர் நுழைந்ததை எதிர்த்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிகுமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் முறையிட்டுள்ளார்.


காவல்துறை விசாரணை நேர்மையாக இல்லை என்பதால் உயர்மட்டக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று அவர் கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து தாக்கல் செய்யப்படும் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்றும் அவரது வழக்கறிஞர் வலியுறுத்தினர்.  முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Also see... பெற்றோர்கள் அனுமதியுடன் குழந்தை விற்பனை - அதிர்ச்சி அளிக்கும் ஆடியோ

Also see... #EXCLUSIVE ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே லட்சியம் - தங்க மங்கை கோமதி

Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்