MADURAI COURT ORDERED TO COMPLETE THE SATHANKULAM DOUBLE MURDER CASE WITHIN 6 MONTHS CRIME VAI
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க உத்தரவு
உயிரிழந்த தந்தை- மகன்
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கின் விசாரணையை கீழமை நீதிமன்றம் 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நிதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த ஜூன் 19-ல் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் போலீஸ் சித்தரவதைக்கு ஆளாகி உயிரிழந்தனர். இதையடுத்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 10 பேரை CBI போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் உயிரிழந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் குற்றவாளிகள் அனைவரும் காவல் துறையை சேர்ந்தவர்கள் என்பதால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் வழக்கு விசாரணையை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார். இதனை தொடர்ந்து சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு விசாரணையை கீழமை நீதிமன்றம் 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.