ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மதுரையில் 2வது நாளாக தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்.. மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகள்

மதுரையில் 2வது நாளாக தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்.. மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகள்

தேங்கிக் கிடக்கும் குப்பைகள்

தேங்கிக் கிடக்கும் குப்பைகள்

மதுரை நகராட்சியில் நாளொன்றுக்கு 800 டன் குப்பைகள் கொட்டப்படுகின்றன. தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக தற்போது குப்பைகள் அகற்றப்படாமல், மதுரையே துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  மதுரை மாநகராட்சி தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு சுகாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்கம், துப்புரவு தொழிலாளர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்கள் என 6000 க்கும் மேற்பட்டோர் பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள மேலவாசல் பகுதியில் தொடர்ந்து  இரண்டாவது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2 நாட்களாக குப்பைகள் அகற்றப்படாததால் அவை மலை போல் குவிந்து காணப்படுகிறது.

  மதுரை மாநகராட்சியில் மொத்தம் 100  வார்டுகள் உள்ளது, இதில் 10,000க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், தினக்கூலி தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், நிரந்தர பணியாளர்களுக்கு 7 வது ஊதியக் குழு பணப் பலன்களை வழங்க வேண்டும், கொரோனா நிவாரண தொகையாக  15 ஆயிரம் வழங்க வேண்டும், ஒப்பந்த பணியாளர்களுக்கு தின ஊதியம் 625 ரூபாய் வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்கள் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை வருகை பதிவேட்டில் கையெழுத்திடும் உத்தரவை கைவிட வேண்டும் உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

  மதுரை மாநகராட்சி தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு சுகாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்கம், துப்புரவு தொழிலாளர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்கள் என 6000 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  ஏற்கனவே, வேலை நிறுத்தம் நடைபெறும் என்று மாநகராட்சிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில்,  இது தொடர்பாக, கடந்த 24 ஆம் தேதி தொழிலாளர்  நலத்துறை ஆணையரிடம் பேச்சு வார்தையானது நடைபெற்றது. எனவே முதல்கட்ட பேச்சு வார்த்தை தோல்வி அடைந்த நிலையில், 2 ஆம் கட்ட பேச்சு வார்த்தையானது கடந்த 25 ஆம் தேதி மாநகராட்சி அதிகாரிகள் கொண்ட சிறப்பு கண்காணிப்பு குழுவிடம்  நடைபெற்றது.

  அதுவும் தோல்வியில் முடிந்தததால் 3 ஆம் கட்ட பேச்சு வார்தையானது கடந்த 28 ஆம் தேதி  மேயர் இந்திராணியிடம்  நடைபெற்ற நிலையிலும், எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை என்ற காரணத்தால், திட்டமிட்டபடி தற்போது தங்களுடைய 28 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது.

  தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்

  நேற்றைய தினம் மாநகராட்சி ஆணையாளர் போராட்டக்குழுவிடம் நான்காம் கட்ட பேச்சு  வார்த்தையில் ஈடுபட்ட நிலையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. மதுரை மாநகராட்சியை பொறுத்தவரையில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளது, சுமார் 17 லட்சம் மக்கள் வசிக்கக்கூடிய மதுரை மாநகராட்சியில் அவர்கள் பயன்படுத்தி கொட்டப்படும் 1700 டன் அளவிலான குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி அப்படியே  கிடக்கின்றது.

  மேலும் படிக்க: மாநகராட்சி கட்டடத்துக்கு கலைஞர் மாளிகை என பெயர் சூட்டியதால் எதிர்ப்பு... பழைய பெயரே தொடரும் என தமிழக அரசு அறிவிப்பு

  இதனால் மக்கள் கூடும் பொது இடங்களில் கழிவு நீர் தேங்கி, குப்பைகள் அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திருப்பரங்குன்றம், தெற்குவாசல் ஆகிய காய்கறி மார்கெட்டில் இருந்து கொட்டப்படும் கழிவுகள் அகற்றப்படாமல் கிடக்கின்றன.

  தேங்கிக் கிடக்கும் குப்பைகள்

  மேலும், அனைத்து வீடுகளின் வாசல்களிலும் குப்பை வாலிகள் வைக்கப்பட்டு, அகற்றப்படாமல் காத்துகிடக்கின்றன. ஒரு பக்கம் குப்பை மேடாகவும், மறுபக்கம் கழிவு நீர் தேங்கி மதுரையே தூர்நாற்றம் வீசுகிறது. வேலை நிறுத்தம் ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில், மதுரை மாநகரம் முழுவதும் பாதுகாப்பு நலன் கருதி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

  செய்தியாளர்: ஹரிகிருஷ்ணன் -மதுரை

  Published by:Murugesh M
  First published:

  Tags: Madurai, Madurai corporation