ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மேயர் கண்முன்னே நடந்த விதிமீறல் - பாதுகாப்பின்றி கழிவுநீர் அடைப்பை சரி செய்த தூய்மை பணியாளர்கள்

மேயர் கண்முன்னே நடந்த விதிமீறல் - பாதுகாப்பின்றி கழிவுநீர் அடைப்பை சரி செய்த தூய்மை பணியாளர்கள்

பாதுகாப்பு இன்றி பணிபுரியும் தூய்மை பணியாளர்கள்

பாதுகாப்பு இன்றி பணிபுரியும் தூய்மை பணியாளர்கள்

கழிவுநீர் தொட்டி அடைப்பை சரி செய்வதற்கு இயந்திரம் பயன்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது என்றாலும், அதை கையாளும் தூய்மை பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்காமல் இருந்தது அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  மதுரை மாநகராட்சி சிறப்பு தூய்மை பணியின் போது மேயர் முன்னிலையிலேயே எந்தவித பாதுகாப்பு உபகரணமுமின்றி கழிவுநீர் தொட்டி அடைப்பை சுத்தம் செய்ய பணியாளர்களை ஈடுபடுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாநகராட்சியின் மண்டலம் 3இல் 59வது வார்டுகுட்பட்ட  ரயில்வே காலனி பகுதியில் இன்று நடைபெற்ற சிறப்பு தூய்மைப் பணியை மேயர் இந்திராணி பார்வையிட்டார். இந்த சிறப்பு தூய்மை பணி நடவடிக்கையின் கீழ் வாய்க்கால் தூர்வாருதல், குப்பைகளை அகற்றுதல், கழிவுநீர் தொட்டியில் அடைப்பு நீக்கி பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

  கழிவுநீர் தொட்டி அடைப்பை சரி செய்வதற்கு இயந்திரம் பயன்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது என்றாலும், அதை கையாளும் தூய்மை பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்காமல் இருந்தது அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த பணியானது மேயர் முன்னிலையில் நடைபெற்ற போதும் கூட அந்த பணியாளர் காலணி, கையுறை, முககவசம் என எந்தவித அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் கூட அணியாமல் இருந்தது மிகுந்த வருத்தத்தை மக்களிடம் ஏற்படுத்தி உள்ளது.

  சமீபத்தில், இது போன்றே எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்காமல் கழிவுநீர் கிணற்றை நிர்பந்தித்து சுத்தம் செய்ய விளைவாக 3 அப்பாவி ஒப்பந்த பணியாளர்கள் பரிதாபமாக உயிரிழக்க நேர்ந்தது. அதன் பின்னர் மேயர் அளித்த அறிக்கையில், அனைத்து ஊழியர்களுக்கும் அவர்கள் பணியின் போது  அவர்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்து இருந்தார். இந்த சம்பவத்திற்கு பின்னர் தாக்கல் செய்யப்பட்ட மாநகராட்சி பட்ஜெட்டிலும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கூடுதல் கவனம் எடுத்துள்ளதை உணர்த்தும்படியாக பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.

  இதையும் படிங்க: புதுவித வெள்ளை ஈ தாக்குதலால் 2,000 தென்னை மரங்கள் பாதிப்பு... கவலையில் விவசாயிகள்

  அந்த அறிவிப்புகள் எல்லாம் பணியாளர்கள் மீது அக்கறை கொண்டு நடைமுறை தவறுகளை சீர் செய்யும் விதமாக இருந்தன. ஆனால், இன்று மேயர் முன்னிலையிலேயே தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகப்பட்டுள்ளது. மாநகராட்சி மேயர் அளித்த அறிக்கைகளையும், அறிவிப்புகளையும் வெறும் வார்த்தைகளாக அல்லாமல் செயல்பாட்டில் கொண்டு வந்து பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் வலுத்துள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Madurai, Madurai corporation