ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வீடு வீடாக காய்கறி விநியோகிக்கும் மதுரை மாநகராட்சி..!

வீடு வீடாக காய்கறி விநியோகிக்கும் மதுரை மாநகராட்சி..!

19 காய்கறிகளைக் கொண்ட தொகுப்பு

19 காய்கறிகளைக் கொண்ட தொகுப்பு

காலை 6 மணி முதல் 10 மணி வரை சம்பந்தப்பட்ட வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக இந்தத் தொகுப்புகள் விற்பனைக்கு வரும் என மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மதுரையில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக 250 ரூபாய்க்கு பல்வேறு காய்கறிகள் அடங்கிய தொகுப்பை வீடு வீடாக விநியோகம் செய்யும் திட்டத்தை மதுரை மாநகராட்சி துவங்கியுள்ளது.

ஊரடங்கு காரணமாக மதுரையில் ஒரே இடத்தில் மக்கள் கூடும் காய்கறி சந்தைகளை பல்வேறு பகுதிகளுக்குப் பிரித்து விநியோகம் செய்யும் முறையை மாநகராட்சி ஏற்படுத்தியது. இருப்பினும் தேவைப்படும் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு கடைகளை இடங்களைத் தேடிச் செல்லும் நிலைக்கு மக்கள் ஆளாகின்றனர்.

இதைத் தவிர்க்கும் விதமாக 250 ரூபாய்க்கு 19 காய்கறிகளைக் கொண்ட தொகுப்பை வீடு வீடாக விநியோகம் செய்ய மதுரை மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி, விளாங்குடியின் மொத்த காய்கறி விற்பனையாளர் சங்கப் பிரதிநிதிகளையும் அழைத்து அவர்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அதனடிப்படையில் தக்காளி, முட்டைகோஸ் தலா ஒரு கிலோ, உருளைக்கிழங்கு ,பெரிய வெங்காயம் தலா அரை கிலோ, சின்ன வெங்காயம் ,கேரட், கத்தரிக்காய், பீட்ரூட், வெண்டைக்காய் தலா கால் கிலோ, பச்சை மிளகாய் 200 கிராம், இஞ்சி 100 கிராம், கறிவேப்பிலை, மல்லி, புதினா தலா 50 கிராம், முருங்கைக்காய், எலுமிச்சை, சௌசௌ காய் தலா 2 எண்ணிக்கை கொண்டது மற்றும் ஒரு தேங்காய் ஆகியவை அடங்கிய தொகுப்பாக விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

100 வார்டுகளைக் கொண்ட மதுரை மாநகராட்சியில் முதற்கட்டமாக 10 வார்டுகளில் இத்திட்டத்தை இன்று தொடங்கினர். ’வா நண்பா வா’, பெட்கிராப்ட், வழக்கறிஞர்கள் குழு ஆகிய மூன்று தன்னார்வ அமைப்புகள் மூலம் மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை வாகனத்தில் இந்தத் தொகுப்புகள் விநியோகம் செய்யப்படும். காலை 6 மணி முதல் 10 மணி வரை சம்பந்தப்பட்ட வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக இந்தத் தொகுப்புகள் விற்பனைக்கு வரும் என மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் தெரிவித்துள்ளார்.

Also see:

Published by:Rizwan
First published:

Tags: Madurai