மதுரையில் அவசர சிகிச்சைக்கு வருபவர்களுக்கு அனுமதி மறுப்பு - 120 மருத்துவமனைகள் குறித்து ஐ.எம்.ஏ.,வில் புகார்

அவசர சிகிச்சைக்கு வருவோரை அனுமதிக்க மறுக்கும் 120 மருத்துவமனைகள் குறித்து ஐ.எம்.ஏ.,வில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் அவசர சிகிச்சைக்கு வருபவர்களுக்கு அனுமதி மறுப்பு - 120 மருத்துவமனைகள் குறித்து ஐ.எம்.ஏ.,வில் புகார்
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: July 22, 2020, 11:19 AM IST
  • Share this:
மதுரையில் அவசர சிகிச்சைக்கு வருவோருக்கு சிகிச்சை அளிக்காமல் கொரோனா பரிசோதனை எடுத்து வர நிர்பந்தித்து அதனால் உயிர் பலி ஏற்படும் அவலம் தொடரும் நிலையில், அது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து குவியும் புகார் காரணமாக 120 மருத்துவமனைகள் மீது இந்திய மருத்துவ கழகத்தில் மாவட்ட நிர்வாகம் புகார் அளித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மதுரை இரண்டாவது இடத்தில் உள்ளது. கொரோனோ அச்சம் காரணமாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை தனியார் மருத்துவமனைகள் அனுமதிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சமீபத்தில் தனியார் மருத்துவமனைகள் மீதான பொதுமக்களின் குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளது.

நெஞ்சுவலி, மூச்சு திணறலில் சிகிச்சைக்கு வந்த பலரை சிகிச்சைக்கு அனுமதிக்க தனியார் மருத்துவமனைகள் மறுத்து அதனால் உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவங்களும் அதிகரித்துள்ளது.


கடந்த இரண்டு ஆண்டுகளாக நெஞ்சுவலிக்கு சிகிச்சை பெற்று வந்து திடீர் வலி ஏற்பட்டு மதுரை வடமலையான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர், உயிரிழக்கும் அந்த நொடி வரை கொரோனா பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட  பாலுச்சாமி என்பவரது மரணம் தான் இதற்கு சரியான உதாரணம்.

மதுரை மேலவாசல் வீட்டுவசதிவாரிய குடியிருப்பில் வசிக்கும் பால்சாமிக்கு 3 மகள்கள். இதய நோயால் கடந்த இரண்டு ஆண்டுகளாக வடமலையான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த ஜூன் 25 அன்று கொரோனா தடுப்பு பணியில் இருந்த பால்சாமிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அவர் ஏற்கனவே சிகிச்சை பெறும் வடமலையான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


படிக்க: வேண்டாம் N-95 முகக் கவசங்கள் - மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை

படிக்க: கொரோனா தடுப்பூசி விநியோகத்திற்கு நாள் குறித்த ரஷியா


படிக்க: த்ரிஷாவுடன் திருமணமா? நடிகர் சிம்பு தரப்பு விளக்கம்








அங்கிருந்தவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல் சிகிச்சைக்கு அனுமதிக்க முடியாது, அரசு ராஜாஜி மருத்துவமனை சென்று சோதனை எடுத்து முடிவுடன் வருமாறு கூறியுள்ளனர்.

வாக்குவாதங்கள் பலனளிக்காத நிலையில் முதலுதவி பெறாமல் பாலுச்சாமியின் உயிர் பிரிந்தது. கொதித்து போன அவரது இளைய மகள் கார்த்திகை ஈஸ்வரி, மாவட்ட நிர்வாக கட்டுப்பாடு அறை மற்றும் மாநகராட்சி புகார் எண்களுக்கு வாட்ஸ் அப் புகார் அளித்தார்.

வழக்கமாக எந்த புகார் வந்தாலும் அதை பெற்றதற்கான ஒப்புதல் தரும் அந்த சேவையில் இந்த புகாருக்கு மவுனமே பதிலளாக கிடைத்துள்ளது. தற்போது இந்த விவகாரத்தை முதல்வரின் தனிப்பிரிவு வரை கொண்டு சென்று பிரச்னையை பூதாகரமாக்கியிருக்கிறார் கார்த்திகை ஈஸ்வரி.

மதுரையில் இதே போல் அவசர நிலையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை தனியார் மருத்துவமனைகள் பல முதலுதவி கூட தராமல் உயிர்பலி ஏற்படுத்துவதாக120  புகார்கள் குவிந்தன. அதன் அடிப்படையில் சம்மந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது.

ஒருபுறம் உயிரை காப்பாற்ற அரசு மருத்துவமனைகள் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் மற்றொரு புறம் முதலுதவி கூட தராமல் சிகிச்சையளிக்க மறுக்கும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 120 தனியார் மருத்துவமனைகள் குறித்து இந்திய மருத்துவ கழகத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மதுரை கொரோனோ சிறப்பு அதிகாரி சந்திரசேகரன் தெரிவித்தார்.

மதுரையை பொறுத்தவரை கொரோனோ தொடர்பான எடுக்கப்படும் பரிசோதனை முடிவுகளை அறிய குறைந்தது 48 மணி நேரம் ஆகிறது.

அவசர காலத்தில் சிகிச்சைக்கு வருவோரை பரிசோதனை எடுத்து வர நிர்பந்திப்பது எப்படி பொறுப்பான செயலாகும் என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில், கொரோனா பாதித்து உயிரிழப்பதற்கும், கொரோனோவை காரணம் காட்டி உயிரிழப்பதற்குமான வித்தியாசத்தை கருத்தில் கொண்டு இந்த விவகாரத்திற்கு தமிழக அரசு தீர்வு தர வேண்டும்.
First published: July 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading