Home » News » Tamil-nadu » MADURAI COMPLAINT AT MADURAI DISTRICT COLLECTORATE TO REMOVE OBSCENE VIDEOS DEPICTING LORD VALLI IN YOUTUBE CHANNELS VIN STA

முருகனுக்கு ஒரு நியாயம்? வள்ளிக்கு ஒரு நியாயமா? மதுரை ஆட்சியரிடம் புகார்

யூ டியூப் சேனல்களில் முருகப்பெருமானின் மனைவியான வள்ளியை இழிவுபடுத்தி குறவன் குறத்தி ஆபாசமான நடனம் வெளியிடுவதை தடை செய்யக் கோரி குறமகள் வள்ளி பெருந்தகை பாசறை, வனவேங்கைகள் கட்சியினர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தனர்.

முருகனுக்கு ஒரு நியாயம்? வள்ளிக்கு ஒரு நியாயமா? மதுரை ஆட்சியரிடம் புகார்
வள்ளி பெருந்தகை அமைப்பு
  • Share this:
யூ டியூப்சானலில் குறவன் குறத்தி நடனம் ஆபாச நடனங்களாக ஆடப்படுகிறது. அந்த ஆபாச நடனத்திற்கு குறவன் குறத்தி ஆட்டம் என்ற குறிப்பிட்டு அதை யூடியூபில் பதிவேற்றம் செய்கிறார்கள்.  அந்த இணையதளத்தின் முகப்பு பெயராக ஆபாசமான  பயன்படுத்துவதாகவும் குறமகள் வள்ளி பெருந்தகை பாசறை மற்றும் வனவேங்கைகள் கட்சி சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இரணியன் செய்தியாளர்களிடம் பேசியது: கந்த சஷ்டி கவசத்தை அவதூறாக பேசிய கருப்பர் கூட்டம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களும் கைது செய்யப்பட்டார்கள். அதற்கு முழு காரணம் முருகனை ஆபாச வார்த்தைகளால் பேசியதே.

முருகனை தவறாக பேசியவர் மீது நடவடிக்கை எடுத்தது போல  அவருடைய மனைவி வள்ளியையும் அவர் சார்ந்த இந்திய வம்சாவளியான குறவர் சமூகத்தை இழிவாக கேவலமாக ஆபாச வார்த்தைகளில் பதிவிடும் யூடியூப் ஆபாசவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Also read... நாளை தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு... வானிலை மையம்

இந்த சமூகம் இப்போது தான் கல்வி வேலை வாய்ப்பு முன்னேறி வரும் சூழலில் இதுபோன்று கொச்சைப்படுத்துவதை கண்டித்து  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது. முருகனை பழித்தவர்கள் மீது நடவடிக்கு எடுத்தது போல் வள்ளியை அவமதிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க மனு அளித்துள்ளோம், என்றார்.
First published: July 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading