மதுரையிலும் 'பட்டாக்கத்தி' மாணவர்கள் அட்டூழியம் - டிக்கெட் கேட்ட நடத்துனருக்கு வெட்டு!

டிக்கெட் எடுக்க கூறியதால், நடத்துனரை பேருந்தில் வைத்து மாணவர்கள் வெட்டிய சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: July 30, 2019, 1:35 PM IST
மதுரையிலும் 'பட்டாக்கத்தி' மாணவர்கள் அட்டூழியம் - டிக்கெட் கேட்ட நடத்துனருக்கு வெட்டு!
சென்னையில் மாணவர்கள் கத்தியுடன் மோதும் காட்சி
Web Desk | news18
Updated: July 30, 2019, 1:35 PM IST
சென்னையைப் போலவே, மதுரையிலும் அரசுப்பேருந்தில் கத்தியுடன் வலம் வந்த மாணவர்கள், டிக்கெட் கேட்டதற்காக நடத்துனரை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் சீருடை அணிந்த இரண்டு மாணவர்கள், பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து ராஜக்கூர் வரை செல்லும் பேருந்தில் ஏறினர். அப்போது நடத்துனர் பயணச்சீட்டு எடுக்கச் சொன்னபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து பேருந்தானது கருப்பாயூரணி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது மாணவர்கள் 2 பேரும் பையில் மறைத்து வைத்திருந்த 2 பட்டாக்கத்தியை எடுத்து நடத்துனரை தாக்கியுள்ளனர்.


இதில் படுகாயமடைந்த நடத்துனர் கணேசன், ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அந்த 2 மாணவர்களையும் தேடி வருகின்றனர்.

டிக்கெட் எடுக்க கூறியதால், நடத்துனரை பேருந்தில் வைத்து மாணவர்கள் வெட்டிய சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க.... சென்னை கல்லூரி மாணவர்கள் மோதல் - பின்னணி என்ன?

Loading...


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...