பைக்கில் வேகமாகச் சென்றதால் பிரச்னை: வாலிபர் வெட்டிக்கொலை!

கோப்புப் படம்

மதுரையில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றது தொடர்பான பிரச்னையில் இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்டார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மதுரையில் இரு சக்கர வாகனத்தில் வேகமாக சென்றது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார்,  காமராசர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். குறுகிய தெருக்களை கொண்ட அனுப்பானடி பகுதியில் பிரவீன் குமார் இருசக்கர வாகனத்தில் வேகமாக செல்வதையே வழக்கமாக கொண்டிந்ததாக கூறப்படுகிறது.

அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் வேகத்தைக் குறைக்கும் படி பிரவீன் குமாரிடம் அறிவுறுத்தியதாக தெரிகிறது. ஆனால், தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வேகமாகவே பிரவீன் சென்றுள்ளார்.

நேற்றிரவு வீட்டில் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த பிரவீன் குமாரை சுற்றி வளைத்த 5 பேர் கொண்ட கும்பல், அவரை தெருவில் இழுத்து வந்து சரமாரியாக வெட்டியுள்ளது.

இதில் படுகாயமடைந்த பிரவீன் குமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொலையில் ஈடுபட்ட 5 பேர் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள தெப்பக்குளம் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

கொலையில் தொடர்புடைய 5 பேரும் 20 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றதற்காக கொலை நிகழ்ந்த சம்பவம் அனுப்பானடி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Sankar
First published: