சித்திரை திருவிழா : மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நாளன்று பக்தர்களுக்கு அனுமதி

சித்திரை திருவிழா : மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நாளன்று பக்தர்களுக்கு அனுமதி

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் திருகல்யாண நாளில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கபட்டுள்ளது.

 • Share this:
  கொரோனா நோய்களின் தாக்கம் அதிகரிப்பதன் காரணமாக மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் திருக்கல்யாண அன்று பக்தர்கள் வழிபட அனுமதித்த உத்தரவை கோவில் நிர்வாகம் திரும்பப் பெற்றுள்ளது. பக்தர்கள் வீட்டிலிருந்தபடியே திருக்கல்யாண நிகழ்வுகளை இணைய தளம் மற்றும் தொலைக்காட்சிகளில் நேரலையில் பார்க்கவும் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது

  இதுகுறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ,

  மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழாவின் திருக்கல்யாண நிகழ்ச்சி வருகிற 24-4-21 சனிக்கிழமையன்று காலை 8.45 மணி முதல் 8.50 மணிக்குள் நடைபெறும்.

  மேற்படி திருக் கல்யாண நிகழ்ச்சியைகாண பக்தர்களுக்கு அனுமதி இல்லை. திருக்கல்யாண நிகழ்ச்சியை பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே அரசு நெறி காட்டு விதிமுறைகளை பின்பற்றி திருக்கோவில் Website , you tube, இந்து சமய அறநிலையத் துறை website மற்றும் உள்ளூர் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப திருக்கோயில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  மேலும் திருக்கல்யாணம் முடிந்தவுடன் திருமண கோலத்தில் உள்ள அம்மன் சுவாமியை பழைய திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9- 30 மணி முதல் 2-30 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை வழக்கமான தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற விபரம் தெரிவித்துள்ளது.

   

  மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் அன்று பக்தர்கள் காலை 9.30 மணி முதல் 2.30 மணி வரை சாமி வழிபட கோவில் நிர்வாகம் அனுமதி அளித்த நிலையில் , இதன் காரணமாக திருக்கல்யாணம் அன்று பக்தர்கள் கூட்டம் கோவிலுக்கு அதிகமாக வருவார்கள் அதனால் நோய் பரவல் அதிகரிக்கும் என்பதை அறிந்து மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் காரணமாக பக்தர்களை அனுமதிக்கும் உத்தரவை கோவில் நிர்வாகம் திரும்பப் பெற்றதாக மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Vijay R
  First published: