அதிமுக கூட்டணியில் பசும்பொன் தேசிய கழகத்திற்கு தொகுதி ஒதுக்கீடு

பசும்பொன் தேசிய கழகம்

மதுரை மத்திய தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது...

 • Share this:
  தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பசும்பொன் தேசிய கழகத்திற்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

  தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. இதனால், தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர் பட்டியல் வெளியீடு என அரசியல் களம் பரபரப்பாகக் காணப்படுகின்றது.

  இந்நிலையில், அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதேபோல அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியலும் நேற்று வெளியானது. மற்ற கட்சிகளும் தொடர்ந்து வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.

  இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பசும்பொன் தேசிய கழகத்திற்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஒப்பந்தத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும்,  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கையொப்பமிட்டுள்ளனர்.  Must Read : 171 தொகுதிகளுக்கான அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியீடு

   

  அதேபோல, பசும்பொன் தேசிய கழகத் தலைவர் ஜோதி முத்துராமலிங்க தேவரும் கையெழுத்திட்டுள்ளார்.
  Published by:Suresh V
  First published: