சாத்தான்குளம் வழக்கை விசாரித்த 4 அதிகாரிகளுக்கு கொரோனா - மதுரை சிபிஐ அலுவலகம் மூடல்

சாத்தான்குளம் வழக்கை விசாரித்த 4 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மதுரை சிபிஐ அலுவலகத்தை இரண்டு நாள் மூடப்படுகிறது.

சாத்தான்குளம் வழக்கை விசாரித்த 4 அதிகாரிகளுக்கு கொரோனா - மதுரை சிபிஐ அலுவலகம் மூடல்
மதுரை சிபிஐ அலுவலகம்
  • Share this:
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் விசாரிப்பதற்காக டெல்லியிலிருந்து தலைமை அதிகாரி உட்பட எட்டு சிபிஐ அதிகாரிகள் கடந்த 10ம் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்தனர், இவர்களில் 4 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது,

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் உட்பட பத்து பேரை இரண்டு கட்டமாக சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தினர்.

இரண்டாம் கட்ட விசாரணையானது காவலர்கள் சாமதுரை, செல்லத்துரை, வெயில் முத்து ஆகிய மூவரையும் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து கொண்டிருக்கும் போது சிபிஐ அதிகாரிகள் இருவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து  அவசரஅவசரமாக விசாரணையை முடித்தனர்,


இதனைத் தொடர்ந்து இன்று மேலும் 2 சிபிஐ அதிகாரிகளுக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து,
மதுரை ஆத்திகுளம் பகுதியிலிருக்கும் சிபிஐ அலுவலகம் இரண்டு நாள் மூட மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Also read... நியூஸ்18 செய்தி எதிரொலி... ஆவின் நாணய சங்கத்தில் நடந்த கையாடல் விவகாரத்தில் 2 பேர் பணியிடை நீக்கம்தற்போது சிபிஐ அலுவலகம் முழுவதும் மாநகராட்சி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மேலும் அவர்கள் தங்கியிருந்த அரசு விருந்தினர் மாளிகையும் மூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது அங்கும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணியானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
First published: July 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading