ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்: மத்திய - மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்:  மத்திய - மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
மாதிரி படம்
  • Share this:
இந்தியா முழுவதும் online rummy விளையாட்டுக்கு தடை விதிக்க மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் அமர்ந்து சீட்டு விளையாடியதால் போலீசார் கைது செய்ததை எதிர்த்து கூடங்குளத்தைச் சேர்ந்த சிலுவை என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, ஆன்லைனில் விளையாடப்படும் ரம்மி போன்ற விளையாட்டுகள் பணத்தை மையமாக வைத்து நடைபெறுவதாகவும், இதனால் வேலையில்லா இளைஞர்களின் நேரமும், அவர்களுடைய சிந்திக்கும் திறனும் கெடுவதாகவும் தெரிவித்தார்.


Also see... தங்க நிற உடையில் மின்னும் ஐஸ்வர்யா ராஜேஷின் நியூ போட்டோஸ்

தெலங்கானாவில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ததை குறிப்பிட்ட நீதிபதி, தமிழகம் உட்பட நாடு முழுவதும் இதற்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்தார்.
First published: July 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading