டாஸ்மாக் திறப்பதில் அரசுக்கு பொதுநலன் இல்லை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விமர்சனம்

உயர்நீதிமன்ற மதுரை கிளை

டாஸ்மாக் கடைகள் முன்பு விலைப்பட்டியல் வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, மதுபானக்கடைகள் திறப்பதில் அரசுக்கு பொதுநலன் இல்லை எனவும் விமர்சித்துள்ளது.

  • Share this:
    தேனி மாவட்டம் ஜக்கம்பட்டி அன்னை சத்யா நகர் பகுதியில், பசுமை வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்றவேண்டி, முன்னாள் ராணுவ வீரர் கோபால் என்பவர், உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, மதுபானக் கடைகளை திறப்பதில் தமிழக அரசுக்கு பொதுநலன் இல்லை என கடுமையாக சாடியது.

    Also read... கொரோனா பற்றி தவறான தகவல்... டிரம்பின் கணக்கை முடக்கிய ட்விட்டர்

    மேலும் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதை தடுக்கும் வகையில் டாஸ்மாக் கடைகள் முன்பு விலைப்பட்டியல் வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டது.



    டாஸ்மாக் கடையைச் சுற்றி பாட்டில்கள், குப்பைகள் சிதறிக் கிடப்பதால் சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவுவதாகவும் குறிப்பிட்ட நீதிபதிகள், இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.

    இதனைதொடர்ந்து அன்னை சத்யா நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை இயங்கவும் நீதிபதிகள் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
    Published by:Vinothini Aandisamy
    First published: