முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆபாசமாக வடிவமைக்கப்பட்ட விளம்பரங்களை ஒளிபரப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை..

ஆபாசமாக வடிவமைக்கப்பட்ட விளம்பரங்களை ஒளிபரப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை..

மதுரை உயர் நீதிமன்றம்

மதுரை உயர் நீதிமன்றம்

ஆபாசத்தை பரப்பும் வகையிலான கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்சனை தொடர்பான மருத்துவங்கள் உள்ளாடைகள், சோப்புகள், ஐஸ்கிரீம்கள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட விளம்பரங்களை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஆபாசமாக உருவாக்கப்பட்ட விளம்பரங்களை, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த சகாதேவராஜா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்னை தொடர்பான மருத்துவ நிகழ்ச்சிகளில் வரும் விளம்பரங்கள் மிகவும் ஆபாசமாக உள்ளதாகவும், இந்த விளம்பரங்களுக்கு எந்த தணிக்கையும் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

சோப்புகள், ஐஸ்க்ரீம், வாசனை திரவியம் போன்ற விளம்பரங்களுக்கும் பெண்களை ஆபாசமாக சித்தரித்து விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுவதாக மனுவில் தெரிவித்திருந்தார்.

எனவே விளம்பரங்களை தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வாதங்களை கேட்ட நீதிபதிகள், ஆபாசமாக உருவாக்கப்பட்ட விளம்பரங்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்தனர்.

மேலும் படிக்க.. பொள்ளாச்சி அருகே 90 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது..

மேலும் இதுதொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை செயலாளர், தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

First published:

Tags: Advertisement, High court, Madurai, Obscene