ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்தியர் - கேக் வெட்டி கொண்டாடிய மதுரை ரசிகர்கள்

மதுரையில் கொண்டாட்டம்

ஒலிம்பிக் தடகள போட்டியில் இந்தியா சார்பில் முதல் தங்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்ராவுக்கு மதுரை ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  • Share this:
டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் தடகள பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் அரியானாவை சேர்ந்த 23 வயது நீரஜ் சோப்ரா. ஒலிம்பிக் தடகள பிரிவில் முதன் முதலாக தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனையை இந்தியா தனதாக்கியுள்ளது.

இதனை கொண்டாடும் விதமாக, மதுரை புதூர் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் ஒலிம்பிக் கோல்டு பவுண்டேஷன் சார்பாக விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ரசிகர்கள் இணைந்து கேக் வெட்டி நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Neeraj Chopra Olympic Javelin Throw Champion (87.58 m) என்ற வாழ்த்து வாசகங்கள் அடங்கிய கேக்கினை வெட்டி, அவர் மென்மேலும் தங்கப்பதக்கம் குவிக்க வேண்டும் என உற்சாகத்துடன் கோஷமிட்டு, கரவொலி எழுப்பினர்.
Published by:Karthick S
First published: