”தமிழர்களின் பண்பாட்டை அறிய மத்திய அரசு காலம் தாழ்த்தக் கூடாது” - உயர்நீதிமன்றம்!

சிவகளையில் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து மத்திய,மாநில தொல்லியல் துறை இயக்குநர்கள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

news18
Updated: February 12, 2019, 3:55 PM IST
”தமிழர்களின் பண்பாட்டை அறிய மத்திய அரசு காலம் தாழ்த்தக் கூடாது” - உயர்நீதிமன்றம்!
உயர்நீதிமன்ற மதுரை கிளை
news18
Updated: February 12, 2019, 3:55 PM IST
தமிழர்களின் நாகரீகம், பண்பாட்டை அறிய முயல்வதில், மத்திய அரசு காலம் தாழ்த்துவது ஏற்புடையது இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்  கருத்து தெரிவித்துள்ளனர்.

செய்துங்கநல்லூரை சேர்ந்த காமராஜ் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநலமனுவில், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சிவகளையில், பல வரலாற்று சான்றுகள் புதைந்துள்ளதால் இந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி நடத்தியதன் முடிவு என்னானது? என்றும், ஏன் இதுவரை ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி அறிக்கை சமர்பிக்கவில்லை? என கேள்வி எழுப்பினர்.

தமிழர் நாகரீகம், பண்பாட்டை அறிவது முக்கியம் என்றும், ஆனால் இதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது ஏற்புடையது இல்லை என்றும் கூறினர்.

சிவகளையில் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து மத்திய,மாநில தொல்லியல் துறை இயக்குநர்கள் பதிலளிக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் தொடர்புடைய தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு சம்மன் பிறப்பிக்கப்படும் என கூறி வழக்கை பிப்ரவரி 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Also see...

First published: February 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...