• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் எத்தனை மதுபான தொழிற்சாலைகள் உள்ளன? அரசிற்கு நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் எத்தனை மதுபான தொழிற்சாலைகள் உள்ளன? அரசிற்கு நீதிமன்றம் கேள்வி

உயர்நீதிமன்ற மதுரை
கிளை

உயர்நீதிமன்ற மதுரை கிளை

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகத்தில் செயல்படும் மதுபான தொழிற்சாலைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றில் இருந்து டாஸ்மாக்கிற்கு வினியோகம் செய்யப்படும் மதுபானங்களின் விவரங்கள் குறித்து, தமிழக அரசு தெரிவிக்க வேண்டுமென  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகரைச் சேர்ந்த காந்திராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கில், மதுக்கடைகளை படிப்படியாக குறைக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவில்லை எனவும், இதுகுறித்து நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்

இந்த வழக்கானது நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் எத்தனை மதுபான தொழிற்சாலைகள் இயங்குகின்றன என கேள்வி எழுப்பினர்.

மேலும், அவற்றில் இருந்து எவ்வளவு மதுபானங்கள் டாஸ்மாக் கடைகளுக்கு வினியோகம் செய்யப்படுகின்றன எனவும் அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்த விவரங்களை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒருவாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: