அரசு அதிகாரிகள் நீதிமன்றங்களுடன் விளையாட வேண்டாம்: நீதிபதிகள் எச்சரிக்கை!

அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளோடு கை கோர்க்காமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், அதிகாரிகள் நீதிமன்றங்களோடு விளையாட வேண்டாமென்றும் எச்சரித்தனர்.

news18
Updated: January 9, 2019, 5:09 PM IST
அரசு அதிகாரிகள் நீதிமன்றங்களுடன் விளையாட வேண்டாம்: நீதிபதிகள்  எச்சரிக்கை!
உயர்நீதிமன்ற மதுரை கிளை
news18
Updated: January 9, 2019, 5:09 PM IST
அரசு அதிகாரிகள் நீதிமன்றங்களோடு விளையாட வேண்டாமென்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்

கரூர், திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்ட சூழலில், கரூரைச் சேர்ந்த சரவணன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2 மாதங்களுக்குள் அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டுமென உத்தரவிட்டது. எனினும் நடவடிக்கை எடுக்கப்படாததால், கரூர் நகராட்சி நிர்வாக செயலர், நிர்வாக ஆணையர் மற்றும் நகராட்சி ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. கரூர் நகராட்சி நிர்வாக செயலர் உள்ளிட்ட  மூவரும் நேரில் ஆஜராகினர். பேருந்து நிலையத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தை விட வேறு பொருத்தமான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக செயலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கரூரில் பேருந்து நிலையம் அமைப்பதற்கென தேர்வு செய்யப்பட்ட இடமே ஆகச்சிறந்த இடம் என பதில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இப்போது இவ்வாறு கூறுவது ஏற்கத்தக்கதல்ல என நீதிபதிகள் கண்டித்தனர்.

அப்போது முதல்வரோடு கலந்தாலோசித்த பின்னரே இதுகுறித்து உறுதியளிக்க இயலும் என கரூர் நகராட்சி நிர்வாக செயலர் தெரிவித்தார்.
Loading...
அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளோடு கை கோர்க்காமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், அதிகாரிகள் நீதிமன்றங்களோடு விளையாட வேண்டாமென்றும் எச்சரித்தனர்.

மேலும், நீதிமன்ற உத்தரவு நடைமுறைப்படவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Also see...

First published: January 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...