• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கிரிஜா வைத்தியநாதன் மீது குற்றவியல் நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி!

கிரிஜா வைத்தியநாதன் மீது குற்றவியல் நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி!

தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்

தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்

குட்கா வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தவறான தகவலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் மீது குற்ற நடவடிக்கை எடுக்க கோரி கதிரேசன் மீண்டும் மனுத் தாக்கல் செய்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    குட்கா விவாகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை கொடுத்ததாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மீது குற்றவியல் நடவடிக்கை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

    குட்கா முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை கோரி மதுரையைச் சேர்ந்த கதிரேசன் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனு விசாரணையின் போது, தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் தரப்பில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், குட்கா முறைகேட்டில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான எந்த ஆவணமும் அரசு அலுவலகங்களில் இல்லை என கூறப்பட்டது.

    இதனை ஏற்று நீதிமன்றம் அந்த வழக்கை லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரிக்க உத்தரவிட்டிருந்தது.

    இதனிடையே சென்னை போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா வீட்டில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற வருமானவரித் துறை சோதனையின் போது, குட்கா முறைகேட்டில் டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான வருமான வரித்துறை அளித்த கடிதம் உள்ளிட்ட சில ஆவணங்கள் சசிகலா அறையில் கைப்பற்றப் பட்டன.

    அந்த ஆவணங்களும் வருமான வரித்துறையினர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டுள்ளது.

    குட்கா வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தவறான தகவலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் மீது குற்ற நடவடிக்கை எடுக்க கோரி கதிரேசன் மீண்டும் மனுத் தாக்கல் செய்தார்.

    இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது, குட்கா விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறையினர் டிஜிபிக்கு கடிதம் அனுப்பியது மற்றும் தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பியது தொடர்பான ஆவணங்கள் நீதிமன்றத்தில் சீலிட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த வழக்கை நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது வருமான வரித்துறை சார்பில் குட்கா விவாகரம் தொடர்பாக நடவடிக்கை கோரி வருமானத்துறை அனுப்பிய கடிதம் தலைமை செயலர் அலுவலகத்திற்கு சென்றடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.

    அந்தக் கடிதம் சென்றடைந்த போது தற்போதைய தலைமை செயலர் பொறுப்பில் இல்லை. ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை தொடர்ந்து வழக்கின் தீர்ப்பினை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

    இந்ந வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பளித்த நீதிபதிகள், சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: